சுக்கிர யோகத்தை அள்ளித் தரும் சுக்கிரன் மூல மந்திரம்

Sukran-mantra-1

வாழ்வில் ஒருவர் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக இருக்கிறாரென்றால் அவருக்கென்ன அவர் “குபேர வாழ்க்கை” வாழ்கிறாரெனவும், அவருக்கு “சுக்கிரத் திசை” எனவும் சிலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவனது ஜாதகத்தில் “சுக்கிரன்” கிரகம் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் ஒரு சுமாரான வாழ்கையையே வாழ்வார். ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற உதவும் மந்திரம் தான் “சுக்கிரன் மூல மந்திரம்”.

sukran

மந்திரம்:
“ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்”

பொது பொருள்:
முல்லை மலர், தாமரை நூல் போன்றவை போல வெண்மையான நிறம் உடையவரே, அசுரர்களுக்கெல்லாம் குருவே, அனைத்து சாஸ்திரங்களையும் நன்கு கற்று தேர்ந்தவரே, பிருகுவின் புதல்வனே, சுக்கிர பகவானே உங்களை வணங்குகிறேன்.

இம்மந்திரத்தை வெள்ளியன்று விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையிலும், மாலை சந்தியா வேளையிலும் நல்ல உடற்சுத்தியோடு மகா லட்சுமியின் படத்திற்கு முன் நெய்தீபம் ஏற்றி வைத்து, சர்க்கரை அல்லது கற்கண்டை நைவேத்தியமாக படைத்து, 108 முறை ஜெபிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர உங்களின் வாழ்வில் அனைத்து விதமான செல்வம் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். சிறுநீரக, நீரிழிவு நோய்களுக்கு காரகன் சக்கிர பகவான் என்பதால் அது சம்மந்தமான பாதிப்புகள் நீங்கும்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்

English Overview:
Here we have Lord Sukran moola mantra in Tamil. By chanting this mantra one can get all wealth and the grace of Lord Sukran.