நாளை (10/4/2021) மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்! 12 ராசிக்காரர்களுக்கும் உரிய அதிர்ஷ்ட பலன்கள் என்ன?

sukran

2021 இல் இதுவரை மீன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சுக்கிர பகவான் நாளை(10/4/2021) காலை 6:42 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். களத்திர காரகனாக இருக்கும் சுக்கிர பகவானால் ஏற்படும் நன்மைகள் என்ன? 12 ராசிக்காரர்களுக்கும் இந்த பெயர்ச்‌சியானது எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவான் பொன், பொருளை வாரி வாரி வழங்க இருக்கிறார். இதுவரை முகத்தில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வெள்ளிக்கிழமையில் வெள்ளை தாமரைப் பூக்களை கொண்டு மகாலட்சுமி வழிபாடு செய்து வர சகல செல்வங்களும் சேரும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து பதினோராம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் இனி வரும் காலங்களில் அவைகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். உங்களுடைய பேச்சில் இனிமையை செலுத்தினால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீட்டின் கதவை தட்டும். நவகிரக வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து பத்தாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் மதிப்பும், மரியாதையும் உயரும் சலுகைகளும், பதவிகளும் வந்து சேரும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வெள்ளிக்கிழமையில் பால் பாயாசம் நிவேதனம் வைத்து மகாலட்சுமியை வழிபட செல்வம் சேரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் நிறைய அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு பக்க பலமாக உங்களுடைய குடும்பத்தார் இருப்பார்கள். பச்சரிசி தானம் செய்து வர நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை ஓங்கும் உங்களுடைய கற்பனை வளமும் வசீகரிக்கும் வண்ணம் அமையும். சர்க்கரை தானம் செய்ய நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து ஏழாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் தொல்லை நீங்கும். உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும். முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து ஆர்வம் செலுத்தினால் முன்னேற்றம் உண்டு. மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து ஆறாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் இனிவரும் காலங்களில் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மேல் அன்பு பிறக்கும். திருமண வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் விரைவாக கைகூடிவரும். சுக்கிர பகவானுக்கு வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபடுபவர்களுக்கு யோகம் உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் நன்மைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொன் நகைகள், ரத்தினங்கள் வாங்கும் யோகம் உண்டு. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சூரிய பகவானை வழிபடுவது சிறப்பம்சமாகும்.

தனுசு
dhanusu
தனுசு ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரிக்க இருக்கும் சுக்கிர பகவானால் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்வதால் அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கப் பெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு. வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்கி மகாலட்சுமியை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து சுக்கிர பகவான் மூன்றாம் இடத்திற்கு சஞ்சரிக்க இருப்பதால் இதுவரை வருமானம் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையும். உங்களுடைய எதிர்ப்பாலினத்தவர் மீது ஈர்ப்பு உண்டாகும். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி பிறக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து சுக்கிர பகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் தன வரவு தாராளமாக அமையும். சகோதர, சகோதரிகளின் வழியே அனுகூலமான பலன்கள் உண்டு. ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயர்ந்து காணப்படும். துர்க்கை வழிபாடு மேற்கொண்டால் நன்மைகள் உண்டு. அடிக்கடி வெள்ளை நிற ஆடை உடுத்தி கொள்வதால் யோகம் உண்டாகும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டு. வீண் விரயங்களை தவிர்த்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு வர இருக்கும் செலவுகள் சுப செலவுகளாக ஏற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம். சுக்கிர வழிபாடு செய்து நெய்தீபம் ஏற்ற நன்மை உண்டாகும்.