அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி – 12 ராசிக்காரர்களுக்குமான துல்லிய பலன்கள்!

sukran-peyarchi

நவக்கிரகங்களில் சுக்கிரன் நன்மையைச் செய்யக்கூடிய கிரகங்களில் ஒருவராக இருக்கின்றார். சுக்கிரனுடைய காரகத்துவங்கள் சுகபோக வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கும். ஒருவருடைய காதல், திருமணம், மகிழ்ச்சி, வாகனம், ஆடம்பரம், ஆபரணம், ஆடை, அணிகலன்கள், கலைகள் அத்தனையும் சுக்கிரபகவான் உடைய அருட்கொடையாகும். இவர் உங்கள் ராசியிலிருந்து மாதம் ஒருமுறை பெயர்ச்சி ஆகி கொண்டே இருப்பார். அவ்வகையில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இம்மாதம் பெயர்ச்சியாகி இருக்கும் சுக்கிர பகவானால் கிடைக்கக்கூடிய பலன்களை 12 ராசிக்காரர்களுக்கும் தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.

sukran

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சியாகி இருக்கும் பொழுது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமைத்து தரும். தொலை தூர பயணங்கள் மூலம் அனுகூலப் பலன்களைக் காண்பீர்கள். தொழில் முறை கூட்டாளிகள் உடனான வருமானத்தில் லாபத்தை அதிகமாக காணலாம். சுக்கிரனுடைய அருளைப் பெறுவதற்கு மேஷ ராசிக்காரர்கள் வெண்ணிற உடையை உடுத்தி கொள்வது பலன் தரும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து பதினோராவது இடத்தில் பெயர்ச்சியாகி இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உங்களால் தீர்க்கப்படாத பல விஷயங்கள் தீர்வுக்கு வரும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை மற்றும் அரசு வழி உதவிகள் அனைத்தும் சாதக பலன்களை கொடுக்கும். நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய சரியான சந்தர்ப்பம் அமையும். நீண்ட நாள் பழைய மறந்து போன உறவுகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் ராசிக்கு சுக்கிரன் அருள் பெற வஸ்திர தானம் செய்யலாம்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனுடைய பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 10-வது வீட்டில் அமைந்துள்ளதால் தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கலைத்துறை மற்றும் பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய லட்சியங்கள் நிறைவேறும் வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே இருந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் மனநிறைவை காணலாம். உங்கள் ராசிக்கு சுக்கிர பகவான் உடைய அருள் கிடைக்க சுக்கிர பகவான் மந்திரத்தை உச்சரிப்பது பலன் தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசியிலிருந்து சுக்கிர பகவான் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து இருப்பதால் அபரிமிதமான நல்ல பலன்களை காணலாம். திடீர் ராஜயோகம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை நீங்கி, மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பணிகளை தொடர்வீர்கள். ஒரு சிலர் குடும்பத்தோடு வெளியூர் பயணங்கள், சுற்றுலா போன்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுக்கிர பகவானுடைய அருள் பெற நீங்கள் சுக்கிர எந்திர வழிபாடு செய்வது சிறப்பான பலன் தரும்.

- Advertisement -

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசியில் இருந்து எட்டாவது வீட்டில் அமர்ந்து இருக்கும் சுக்கிரனுடைய அருட்கொடை தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புத்தம் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் வருமானம் இரட்டிப்பாகும் யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் வளர்ச்சி பாதையை காணும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் ராசிக்கு நீங்கள் கிருஷ்ணர் கதைகளை படிப்பது உத்தமம்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் உங்கள் ராசியில் இருந்து 7வது இடமான மீன ராசியில் அமர்ந்திருக்கும் சுக்கிர பகவான் தனிப்பட்ட இரு உறவுகளுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியான நேரங்களை செலவிடுவீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரக் கூடிய வாய்ப்புகள் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். மகாலட்சுமி வழிபாடு செய்வது சுக்கிர பலத்தை அதிகரிக்கும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பகவான் ராசியிலிருந்து 6ஆம் வீட்டில் நுழைவதால் ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. சிறு உடல் உபாதைகளையும் உடனே கவனித்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றும் தொழில் செய்பவர்களுக்கும் ஓய்வில்லாத தொடரும் உடல் உழைப்பு கொடுக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். நீங்கள் தவிர்க்க முடியாத சில காரணங்களால் உங்கள் பணத்தை கடனாக மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் வரும். உங்களுடைய எதிரிகள் இடத்தில் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தேவையில்லாத வாக்கு வாதங்கள், தேவையில்லாத பிரச்சினைகளை உண்டு பண்ணும். சுக்கிர பலம் பெற நீங்கள் வெள்ளி ஆபரணங்களை உடம்பில் அணிந்து கொள்வது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம் வீட்டில் இருப்பதால் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புக்கு மீறிய லாபம் கிடைக்கும் யோகம் உண்டு. உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள சரியான சந்தர்ப்பம் உண்டு. குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அடிக்கடி வெளியில் சென்று வருவதன் மூலம் மன அமைதி பெறலாம். இளைஞர்கள் காதல் வலையில் விழுவதற்கு வாய்ப்புகள் அமையும். சுக்கிர பலம் பெற சஹஸ்ரநாமம் படிப்பது உத்தமம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து நான்காமிடத்தில் பெயர்ச்சியாகி இருக்கும் சுக்கிர பகவானால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து நான்காம் இடத்தில் இருப்பதால் பொறுமையுடன் காணப்படுவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்களை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உங்களுடைய கஷ்டமான நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். வீட்டை புதுப்பிக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் அமையும். சுக்கிர பலம் பெற ஒவ்வொரு மாகாளியம்மன் ஆகிய சாமிகளுக்கு பூஜைகள் செய்யலாம்.

மகரம்
Magaram rasi
மகர ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசியில் இருந்து மூன்றாம் இடத்தில் சுக்கிர பகவான் அமைந்து இருப்பதால் தொழில் மற்றும் உத்தியோக ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு மேலும் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பணமானது சரளமாகப் புழங்க துவங்கும். உங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதற்கான கல்வி மற்றும் கலைகள் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அமோகமாக வெற்றி காணலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். சுக்கிர பலம் பெற நீங்கள் மோதிர விரலில் தங்கம் அல்லது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்களை அணிந்து கொள்ள வேண்டும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து 2-ம் வீட்டில் நுழைந்து இருப்பதால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபம் அதிகரிக்கும். விருந்து விழாக்கள் போன்ற ஆடம்பர விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கக்கூடும். கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு உரிய கடன் தொகைகள் சிறப்பான வகையில் கிடைக்கப் பெறும். பெற்றோர்களின் உடல்நல பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் ராசிக்கு நீங்கள் தெற்கு திசையின் அதிபதியான சுக்கிரனை தெற்கு திசை நோக்கி வழிபடுவது நல்லது.

மீனம்
meenam
மீன ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசியில் சுக்கிர பகவான் பெயர்ச்சியாகி இருப்பதால் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி வரும். எனவே எப்பொழுதும் மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்து பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நீண்டநாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உங்களுடைய தன்னம்பிக்கையும், தைரியமும் மேலும் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான தருணம் அமையும். சுக்கிரன் பலம் பெற சுக்கிர ஹோரையில் சுக்கிரனை வழிபடுங்கள்.