சுக்கிரன் பெயர்ச்சி 2019 – 15.12.2019 முதல் 09.01.2020 முதல் வரை

sukran-peyarchi

மேஷம்
Aries zodiac sign

பெண்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. பெண்கள் ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வார்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்கள் பங்குதாரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் அனாவசிய பேச்சுகளை அலுவலகத்தில் தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. கோபமான பேச்சுக்கள் வெளிவரும் போது உங்களுக்கான நல்ல வாய்ப்புகள் கைநழுவி சென்றுவிடும். தினந்தோறும் பசுவிற்கு வாழைப்பழம் தருவது நன்மையை அளிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த காரிய தடைகள் அனைத்தும் நீங்கி, நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் போய் முடியும். நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் அதில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா கிடைக்கும். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

நீங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து கூட உங்களுக்கு பண வரவு வரும். நீங்கள் பேசும் வார்த்தைக்கு உங்களை சுற்றி உள்ளவர்கள் இடத்தில் நல்ல மரியாதை இருக்கும். உங்களின் பேச்சு திறனானது அதிகரிக்கும். உங்கள் மனைவியின் உடல் நலனில் அக்கறை கொள்வது அவசியம். உங்களின் பொருள்கள் திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உஷாராக இருப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வயது முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -

கடகம்
zodiac sign

கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அனாவசியமான வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால், தொழில் சம்பந்தமாக செய்யப்படும் விவாதங்களில் நிதானம் தேவை. தொழில் விஷயங்களில் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் உடல்நலனில் அக்கறை அவசியம். வேலைக்கு செல்பவர்கள், உங்கள் பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம்.

சிம்மம்
Leo zodiac sign

உங்கள் உடல் நலனை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலக் குறைபாடு மூலம் மருத்துவத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். அனாவசியமாக பணத்தினை செலவு செய்ய வேண்டாம். உடல்நிலை காரணமாகவும், பணவிரயம் காரணமாகவும் சில சமயங்களில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்தத் தொழிலில் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முதலீட்டினை தவிர்ப்பதும் நல்லது. வேலை பார்ப்பவர்களாக இருந்தால் வேலையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நன்மையை தரும்.

கன்னி
Virgo zodiac sign

நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிதான். உங்களின் பணவரவு அதிகமாகும். உங்கள் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் இனி வரும் காலத்தில் தீர்ந்து விடும். சொந்த தொழிலானது முன்னேற்றத்தை தரும். வேலைக்கு செல்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விளக்கேற்றி வருவதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

துலாம்
Libra zodiac sign

உங்களுக்கு இருந்த காரியத்தடையானது நீக்கப்பட்டு படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் வரும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டும்படி அமையும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடலாம். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். பணவரவு அதிகமாக இருக்கும். இதன் மூலம் வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் அம்மாவின் உடல் நலனில் அக்கறை கொள்வது அவசியம். வண்டி வாகனங்கள் வாங்குவதாக இருந்தால் கவனமாக வாங்க வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வந்தால் நன்மை தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உங்கள் பேச்சு திறமை அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் பூர்வீக சொத்துப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். ஆனால் உடல் நலனில் மட்டும் அக்கறை கொள்வது அவசியம். உங்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தீய பழக்க வழக்கத்திற்கு செல்வதற்கும் சிறு வாய்ப்பு உள்ளது. இதனால் சிறு மன கஷ்டம் ஏற்பட்டு நீங்கும். சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலை அர்ச்சனை செய்து வந்தால் பாதிப்புகள் குறையும்.

தனுசு
Sagittarius zodiac sign

நீங்கள் எதிர்பாராத அளவிற்கு பணவரவு இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சொந்தத் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு யோகமான காலம் இது. பெண்களுக்கு யோகமான அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய காலமாகவும் இது அமையும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.

மகரம்
Magaram rasi

உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் காலமாக அமையப்போகிறது. கடன் வாங்கி செலவு செய்யும் சூழ்நிலை வந்தாலும், அந்த செலவு மகிழ்ச்சி தரக்கூடிய அளவில் இருக்கும். அதாவது திருமணத்திற்கு நகை வாங்குவது, ஆடைகள் வாங்குவது போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய சுப செலவுகளாக அமையும். வீட்டில் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்கள் வியாபாரம் மந்தமாக தான் செல்லும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவதன் மூலம் நன்மையை அடையலாம்.

கும்பம்
Aquarius zodiac sign

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். ஆனால் அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மையை தரும்.

மீனம்
Pisces zodiac sign

நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் உங்களுக்கு லாபமாக தான் அமையப் போகிறது. ராஜ வாழ்க்கை என்று கூட சொல்லலாம். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்குவதற்கு கூட யோகம் உள்ளது. சொந்த தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் தரும். வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.