சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

sukran

சுக்கிர பகவான் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி காலை 8.45 மணி அளவில் “துலாம்” ராசியிலிருந்து “விருச்சிகம்” ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இந்தப் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி
Aries zodiac sign

செல்வத்தை பெற்றுத்தரக்கூடிய சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருந்து மாறுகின்றார். ஆகவே பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது. உங்களிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மனைவியின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மருத்துவச் செலவில் பணம் விரையம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்
உங்கள் அம்மா ஸ்தானத்தில் உள்ள வயதான ஒரு முதியவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்யலாம். ஒரு வேளை சாப்பாடு அல்லது ஒரு புடவையையோ எடுத்து கொடுக்கலாம். வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவிலில் தீபம் ஏற்றலாம்.

ரிஷப ராசி
Taurus zodiac sign

அன்பினை உருவமாக கொண்ட சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதனோடு இருக்கிறார். இதனால் கணவன் மனைவி இருவரிடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் உண்டு. சிலரது காதல் திருமணத்தில் முடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் தொழிலிலும், உடல் நலத்திலும் கவனம் தேவை.

- Advertisement -

பரிகாரம்
சுக்கிர ஓரையில் வெள்ளிக்கிழமை அன்று விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடலாம்.

மிதுன ராசி
Gemini zodiac sign

சுக்கிரன் உங்கள் இராசியில் ஆறாவது இடத்தில் இருந்து மறைகின்றார். இதனால் உங்களுக்கு பணம் விரையம் ஏற்படும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. மனைவியுடன் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் மனைவி பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இருப்பது நல்லது. வேலை சுமை அதிகமாக இருக்கும். இதனால் சிறிய மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு கீரையையும், வெல்லத்தையும் தானமாக அளிக்கலாம்.

கடக ராசி
zodiac sign

அன்பிற்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இதனால் உங்களுக்கு பணவரவு அதிகரித்து, பணம் மழை பெய்யும் காலம் இது. பணம் வரவினால் உங்களுக்கு மகிழ்ச்சி பெருகும். உங்களின் கற்பனை திறன் அதிகரிக்கும். உங்களை அழகு படுத்திக் கொள்ள நீங்கள் நினைப்பீர்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான உறவு இன்னும் வலிமை பெறும். வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்
ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

சிம்ம ராசி
Leo zodiac sign

சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காவது இடத்தில் அமர்ந்துள்ளார். உங்களுக்கு வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பழைய வீட்டினை பராமரிக்கவும் செய்வீர்கள். உங்கள் அம்மாவின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். வாகனங்களை வாங்கவோ விற்கவோ கூடாது. ஏமாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்
பெண்கள் ஆதரவு அற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

கன்னி ராசி
Virgo zodiac sign

சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாவது இடத்தில் உள்ளார். இதனால் உங்களுக்கு முயற்சிக்கும் திறன் அதிகரிக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களது பேச்சாற்றல் மூலம் பதவி உயர்வு வருவதற்கான வாய்ப்பும் உண்டு. புதிய நண்பர்கள் உங்களை தேடி வருவர். உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால், சிறிய உடல்நலக் கோளாறு வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பரிகாரம்
வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றலாம். சிவன் கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

துலாம் ராசி
Libra zodiac sign

உங்கள் ராசியில் சுக்கிரன் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். இதனால் பண வரவு அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனை வீணாக்காமல் செலவு செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பரிகாரம்
வாரந்தோறும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வரலாம்.

விருச்சிக ராசி
Scorpius zodiac sign

உங்கள் ராசியில் புதனும் சுக்கிரனும் ஒரே இடத்தில் இருக்கப் போகிறார்கள்.  உங்களின் அழகு மெருகேரும். உங்களின் வருமானம் அதிகரிக்கும் என்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சுப காரியங்களுக்காக பணம் செலவாக வாய்ப்புண்டு.
மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். சத்தான உணவினை உண்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

பரிகாரம்
வறுமையில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியினை செய்யலாம். அவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதன் மூலம் நல்ல பலன்களை அடையலாம்.

தனுசு ராசி
Sagittarius zodiac sign

உங்கள் ராசியில் ராசியில் சுக்கிரன் 12வது இடத்தில் இருக்கின்றார். இது விரைய காலமாகும். ஆகவே உங்களிடம் உள்ள செல்வதை வீணாக செலவழிக்காமல் இருப்பது நல்லது. சுபச் செலவுகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு சிலருக்கு தேடி வரும்.

பரிகாரம்
உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வரலாம்.

மகர ராசி
Magaram rasi

சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினோராவது இடத்தில் இருக்கின்றார். இது உங்களுக்கு லாபத்தை தேடித்தரும். நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்பவர்கள் ஆனால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை வந்து சேரும். சுகபோக வாழ்க்கையை நீங்கள் அடையப் போகிறீர்கள்.

பரிகாரம்
முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

கும்ப ராசி
Aquarius zodiac sign

உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். இதனால் நீங்கள் புதிய தொழில் தொடங்கலாம்.  தொழிலில்  உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வேலை செய்பவர்களாக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் வீண்பேச்சு வேண்டாம். கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. மனைவியுடன் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது.

பரிகாரம்
ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மனதை அமைதிப்படுத்தி ஒரு 15 நிமிடம் தியானம் செய்துவிட்டு வரலாம்.

மீன ராசி
Pisces zodiac sign

உங்கள் ராசிக்கு ஒன்பதாவது இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையேயான அன்பு அதிகரிக்கும். கணவருக்கு மனைவியின் ஆதரவு கிட்டும். உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்க கூடிய காலம் இது. உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்க வாய்ப்பு உண்டு.

பரிகாரம்
மரக்கன்று ஒன்றை நட்டு அதற்கு தண்ணீரை ஊற்றி வளர்க்கலாம்.