நாளை 31/8/2022 கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்! 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்க இருக்கும் அதிர்ஷ்ட-துரதிர்ஷ்டங்கள் என்னென்ன?

sukran-astro
- Advertisement -

ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு விதமான காலகட்டங்களில் ஒவ்வொரு ராசியையும் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு ராசியிலிருந்து, இன்னொரு ராசிக்கு செல்லும் ஒரு கிரகம், அந்த ராசிக்கு அவர் தங்கி இருக்கும் காலம் வரை வெவ்வேறு பலன்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் நாளை கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம்பெயரும் சுக்கிர பகவான், 12 ராசிக்காரர்களுக்கும் கொடுக்க இருக்கும் அதிர்ஷ்ட மற்றும் துரதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்:
மேஷ ராசியில் இருந்து ஐந்தாம் ராசியான சிம்ம ராசிக்கு இடம் பெயர இருக்கும் சுக்கிர பகவான், உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தின் மீது பற்றும், அக்கறையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஊடல்கள் நீங்கி, அன்னோன்யம் கூடும். உங்கள் ராசிக்கு கற்பனை வளம் அதிகரிக்கப் போகிறது. நடை, உடை, பாவனையை மாற்றி கூடுதல் பொலிவுடன் காணப்படுவீர்கள். வெள்ளிக்கிழமையில் கோவிலில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள் சகல யோகமும் கிட்டும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து நான்காம் இடத்தில் சுக்கிர பகவான் பெயர்ச்சியாக இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் சிறு சிறு வாக்குவாதங்கள் நிகழும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் எனவே செலவுகளில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
மிதுன ராசியில் இருந்து 3-ஆம் இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் நீங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எச்சரிக்கை தேவை. பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, வீண்பழிகளை ஏற்க நேரிடும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் அவ்வப்போது வந்து மறையும். தடைப்பட்ட சுபயோகங்கள் கைகூடி வரும். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றுங்கள் நன்மைகள் பெருகும்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் உள்ளவர்களுக்கு 2-ஆம் இடத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் செலுத்த வேண்டும். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீதும், சொத்துக்கள் மீதும் அக்கறை வேண்டும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வெள்ளிப் பொருட்களை மனதிற்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வதால் சுக்கிர யோகம் உண்டாகும்.

சிம்மம்:
உங்கள் ராசியில் இருந்து சுக்கிர பெயர்ச்சி நடைபெற இருப்பதால் இல்லத்தரசியின் ஆதரவு பெருகும். மனதிற்கு பிடித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருடைய பங்களிப்பும் உங்களுடன் சிறப்பாக அமையப் போகிறது. கணவன் மனைவி அல்லது காதலர்களுக்குள் நெருக்கம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு 12-ஆம் இடத்தில் சுக்கிர பெயர்ச்சி நடைபெற இருப்பதால் தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்காத அளவில் லாபம் குவிய போகிறது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தள்ளி வையுங்கள். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்து செல்லும் எனினும் அன்பு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிர பகவான் பெயர்ச்சியால் கணவன் மனைவிக்குள் இருந்து வரும் பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி தானாகவே வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். வீடு, வாகன யோகம் உண்டு. பொருளாதாரம் மேம்படும். பிள்ளை வரம் கிட்டும் அற்புத பலன் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு 10-ஆம் இடத்தில் சுக்கிர பெயர்ச்சி நடைபெற இருப்பதால் சுப விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் யோகம் கிட்டும். சுக்கிரன் சுகபோக வாழ்க்கையை கொடுக்க கூடியவர். மேலும் கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடியவர். மனரீதியான பாதிப்புகள் மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும், சேமிப்பை மேற்கொள்வது நல்லது. வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்புகளுக்கு சாதக பலன் உண்டு.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து 9ஆம் இடத்தில் அமரப்போகும் சுக்கிர பகவானால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் பெருகும். பொன், பொருள் சேரும் இனிய வாய்ப்புகள் கிடைக்கும். பணம் பல வழிகளில் இருந்து வந்தாலும் அதை சுபச் செலவுகளாக மாற்றுவது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு ராசியிலிருந்து 8-ஆம் வீட்டில் சுக்கிர பகவான் அமர இருப்பதால் பணம் அதிக அளவில் புழங்க இருக்கிறது. தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். வரன் தேடி அலைபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள் அதிர்ஷ்டம் வரும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் இடத்தில் சுக்கிர பெயர்ச்சி நடைபெற இருப்பதால் உங்களுடைய முகத்தில் புதுப்பொலிவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு விதமான தேஜஸ் தென்படும். உங்களுடைய பேச்சாற்றல் அதிகரிக்கும் இதனால் பலரையும் எளிதாக கவர்ந்து விடுவீர்கள். இதுவரை உங்களை சுற்றி இருந்த நட்பு வட்டம் மேலும் விரிவடையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் செல்வம் பெருகும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பகவான் 6-ஆம் இடத்தில் அமர இருப்பதால் அதிர்ஷ்ட யோகங்களை கொடுக்க இருக்கிறார். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் கிட்டும். வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருந்து வந்த தொய்வு நீங்கி விறுவிறுப்பு உண்டாகும். வீடு, வாகன யோகம் உண்டு. மேலும் வரக்கூடிய விரயங்களை, சுப விரயமாக மாற்றாவிட்டால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வீர்கள் எனவே புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

- Advertisement -