இந்த உடைகளை மட்டும் சுமங்கலி பெண்கள் கட்டாயம் உடுத்தவே கூடாது. குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படும்.

women-hanuman
- Advertisement -

ஒரு வீட்டிற்கு மகாலட்சுமியாக விளங்குவது அந்த வீட்டின் சுமங்கலிப் பெண்கள் தான். ஒரு வீட்டில் ஆண் தவறு செய்தால் அது அவனை மட்டுமே பாதிக்கும். ஒரு பெண் தவறு செய்தால் அது அந்த குடும்பத்தையே பாதிக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. சுமங்கலி பெண்ணானவள் எந்த மாதிரியான உடைகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்பதை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

deepam

எந்த வீட்டில் சுமங்கலிப் பெண்கள் சிரித்த முகத்துடன் தினமும் மாலை வேளையில் விளக்கேற்றி வைக்கிறாரோ, அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து காணப்படும். சுமங்கலிப் பெண்கள் உடுத்தும் உடையில் கவனமாக இருப்பது நல்லது. ஏன் கவனமாக இருக்க வேண்டும்? வீட்டில் இருக்கும் மற்றவர்கள் யாரும் செய்யாத வேலைகளை, அந்த வீட்டின் குடும்ப பெண்கள் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு விளக்கு ஏற்றுவது, தானம் அளிப்பது போன்ற செயல்களை அந்த வீட்டில் சுமங்கலி பெண்கள் தான் செய்கின்றனர். எனவே சுமங்கலிப் பெண்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் கிழிந்த உடைகளை அணியவே கூடாது. நாம் எங்கு செல்ல போகின்றோம்? வீட்டில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் கிழிந்த துணிமணிகளை சுமங்கலிப் பெண்கள் உடுத்தினால், அந்த வீட்டில் தரித்திரம் உண்டாகும். சுமங்கலிப் பெண்கள் எப்போதும் நல்ல துணிமணிகளை உடுத்துவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் நீங்கள் பெற்று தரும் மரியாதையாக இருக்கும்.

ancient women

சுமங்கலிப் பெண்கள் அசுத்தமான ஆடைகளை கட்டாயம் உடுத்தவே கூடாது. அசுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு வீட்டின் தலை வாசலை தாண்டி செல்லவே கூடாது. அப்படி செல்லும்போது குடும்பத்தில் தரித்திரம் உண்டாகும். அசுத்தமான ஆடைகளில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. ஏன்? சுமங்கலிப் பெண்கள் தான், இவற்றை கடைபிடிக்க வேண்டுமா? மற்றவர்கள் கிழிந்த உடைகளையும், அசுத்தமான ஆடைகளையும் உடுத்தினால் தரித்திரம் பிடிக்காதா? என்று கேள்வி கேட்டால், உங்களது கேள்வியே தவறு என்று கூறலாம். ஏனென்றால், முதலில் கூறியது தான், ஒரு வீட்டின் மகாலட்சுமியாக விளங்குவது அந்த வீட்டின் சுமங்கலி பெண்கள் தான். ஸ்ரீ தேவியை வீட்டிற்குள் அழைப்பதும், மூதேவியை வீட்டிற்குள் வரவழைப்பதும் சுமங்கலிப் பெண்கள் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு குடும்பத்தில் பெண்கள் அழுதுகொண்டே இருந்தால், சுலபமாக வீட்டில் மூதேவி நுழைந்து விடுவாள். மூதேவி நுழைந்த வீட்டிற்குள் பொருளாதார நிலை பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி சீர்குலையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் தாழ்ந்து போகும். உழைத்த பணம் வீட்டில் தங்காது. வீண் விரயங்கள் ஏற்படும். அதனால்தான் குடும்பத்தில் பெண்களை அழ வைப்பது பாவமாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cloth

சுமங்கலிப் பெண்கள் ஓட்டை விழுந்த துணிமணிகளை உடுத்துவதும் தவறு. நீங்கள் உடுத்தியிருக்கும் துணியில் தவறுதலாக நெருப்பு பட்டு, ஆடையின் நூலிழைகள் பாழ்ப்பட்டிருக்கும் அல்லது விளக்கினாலோ, ஊதுபத்தியினாலோ ஓட்டை ஏற்பட்டிருக்கலாம். இது போன்ற துணிமணிகளை கட்டாயம் சுமங்கலிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். சிறிய, மெல்லிய ஓட்டை விழுந்து இருந்தாலும் கூட அந்த உடையை உடுத்தக்கூடாது.

- Advertisement -

குடும்பத்தின் ஆணிவேராக விளங்குவது சுமங்கலிப் பெண்கள். சுமங்கலிப்பெண்கள் கட்டாயம் நைட்டி போட்டுக் கொண்டு விளக்கு ஏற்றக்கூடாது. உடை மாற்றிக் கொண்டு விளக்கு ஏற்றுவதற்கு கட்டாயம் சோம்பேறித்தனமாக தான் இருக்கும். ஆனால் உங்களின் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு நீங்கள் இதை செய்வது தவறில்லை. நாள் முழுவதும் உழைத்த வேர்வை துளிகளும், அழுக்குகளும் அசுத்தமாக அந்த உடையில் படர்ந்திருக்கும். எனவே அத்தகைய உடைகளை உடுத்திக் கொண்டு விளக்கு ஏற்றும் பொழுது மகாலட்சுமி அந்த வீட்டில் வாசம் செய்ய மாட்டாள்.

mahalakshmi

கிழிந்த துணிகளை தானம் கொடுப்பதும் தவறான விஷயம் தான். வீடு துடைக்க வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம். ஓட்டை விழுந்த துணிகளை பாத்திரம் வாங்க வைத்து கொள்ளலாம். ஆனால் சுமங்கலி பெண்கள் இவற்றை உடுத்துவதை கட்டாயம் தவிர்த்தால் குடும்பத்தில் தரித்திரம் ஏற்படாமல் என்றும் சுபீட்சத்துடன் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே
பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் எல்லோருக்கும் கோடீஸ்வரராகும் யோகம் வருவதில்லையே! அது ஏன்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tharithiram neenga. Tharithiram vilaga. Pengal pinpatra vendiyavai. Pengal kadamaigal in Tamil.

- Advertisement -