அடிக்கின்ற வெயிலில் புதிய துளிர்கள் கருக்காமல் இருக்க, பூச்செடிகளில் மொட்டுக்கள் பெரியதாக, கொத்து கொத்தாக பூக்க 1 டம்ளர் இந்த தண்ணீரை ஊற்றினாலே போதும்.

rose1
- Advertisement -

செடிகளுக்கு எப்போதும் கிடைக்கும் நுண்ணுயிர் சத்தைவிட, வெயில் காலங்களில் அதிகப்படியான நுண்ணுயிர் சத்துக்கள் தேவைப்படும். அதற்கு கடைகளில் காசு கொடுத்து அதிகப்படியான உரங்களை வாங்கிப் போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும், சமையலுக்கு பயன்படுத்தும் வெறும் 2 பொருட்களே போதும். வெயில் காலங்களில் கூட செடிகளை செழிப்பாக வளர்க்க முடியும். செடிகளுக்கு நுண்ணுயிர் சத்து அதிகப்படியாக தரக்கூடிய அந்த ஊட்டச்சத்து தண்ணீரை எப்படி தயாரிப்பது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

vendhayam

இந்த நுண்ணுயிர் சத்து நிறைந்த, ஊட்டச்சத்து தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினால், வெயில் காலங்களில் ஏற்பட கூடிய பூச்சி அரிப்புகளில் இருந்தும் கூட செடிகளை பாதுகாக்க முடியும். சரி பதிவுக்கு செல்வோம். இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள். பழைய சாதம், வெந்தயம் இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில், ஊறவைத்துவிட வேண்டும். அந்த சாதம் அந்தத் தண்ணீரிலேயே மூன்றிலிருந்து நான்கு நாட்கள் நன்றாக ஊர விட்டு விடுங்கள். ஒரு மூடி போட்டு அந்த டப்பாவை மூடி வைத்துவிடுங்கள். மூன்று நாட்கள் கழித்து டப்பாவை திறக்கும் போது கொஞ்சம் புளித்த வாடை அடிக்க தான் செய்யும்.

sadam

அதன் பின்பு 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு மொழு மொழு வென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறிய சாதத்தை ஒரு கரண்டியை கொண்டு நன்றாக அழுத்தம் கொடுத்து கலக்கலாம். அப்படி இல்லை என்றால் ஒரு மத்தைக் கொண்டு பழைய சாதத்தை நன்றாக கடைந்து கொள்ளுங்கள். அந்த பழைய சாதம் கரைசலோடு அரைத்து வைத்திருக்கும் வெந்தயத்தையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டி படாமல் கலந்து விட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த ஊட்டச்சத்து நிறைந்த கரைசல் ஒரு லிட்டர் அளவு இருந்தால், அதை 10 லிட்டர் அளவு நல்ல தண்ணீரோடு நன்றாக கலந்துவிட வேண்டும். உங்கள் செடிகளுக்கு ஏற்ற நுண்ணுயிர் சத்து நிறைந்த தண்ணீர் தயாராகி விட்டது. இப்போது எல்லா செடிகளுக்கும் 1/2 லிட்டர் அளவு இந்தத் தண்ணீரை வேர் பகுதிகளில் ஊற்றி விடலாம். முடிந்தால் இந்த தண்ணீரை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி இலைகளுக்கும் ஸ்ப்ரே செய்யலாம். அப்படி இல்லை என்றால் இந்த தண்ணீரை அப்படியே ஒரு கப்பில் எடுத்து உங்கள் கைகளால் இலைகள் மீது படும்படி நன்றாக தெளித்து விட்டாலும் சரி.

plant

இந்த சத்து நிறைந்த தண்ணீர் இலைகள் கிளைகள் மொட்டுகளின் மீதும் விழவேண்டும். வேர் பகுதிகளிலும் ஊற்ற வேண்டும். இந்த வெயில் காலங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரை உங்கள் செடிகளுக்கு ஊற்றி வந்தால், செடிகள் செழிப்பாக வளரும். மொட்டுக்கள் பெரியதாக பூக்கும். இளந் துளிர்கள் வெயில் கருகி போகாது. பூச்சிகளினால் பாதிப்பு ஏற்படாது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை காய்கறி செடிகள் பூச்செடிகள் பழச் செடிகள் எந்த செடிகளுக்கு வேண்டுமென்றாலும் ஊற்றிக் கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -