கோடை காலத்தில் இந்த தானம் செய்தால் ஏழேழு பிறவிக்கும் துன்பங்கள் தீருமாம்!

sooriyan-sun

மார்ச் மாதம் துவங்கியதுமே கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கோடையின் தாக்கம் மனிதராக இருக்கும் நம்மையே பெருமளவிற்கு வாட்டி வதைக்கிறது என்றால் மற்ற உயிரினங்களை என்ன செய்யும்? ஒவ்வொரு பருவ காலங்களிலும் செய்ய வேண்டிய தானங்கள் உண்டு. குளிர்காலத்தில் சாலையோர மக்களுக்கு கம்பளி தானம் செய்து வந்தால் பிறவி பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் கோடைகாலத்தில் நாம் செய்ய வேண்டிய தானங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sun

கோடை காலத்தில் நாம் செய்யும் தானம் ஆனது நம்மை ஏழு பிறவிக்கும் துன்பக் கடலில் மூழ்காமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதாம். அப்படி கோடைகாலத்தில் நாம் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை தான் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் பசியால் வாடும் விலங்குகளை விட, தாகத்தால் வாடும் விலங்குகளும், பறவைகளும் அதிகம். தண்ணீரைத் தேடி அலையும் பறவைகளுக்கு நாம் தண்ணீர் கொடுத்தால் அதை விடப் பெரும் பேறு ஒன்றுமில்லை. கோடைகாலம் துவங்கியதுமே பறவைகளின் நடமாட்டமும் குறைந்துவிடும். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தால் பாவங்கள் தொலையும். அதையே வாயில்லா ஜீவனுக்கு கொடுத்தால் ஏழு பிறவிக்கு தீராப்பிணியும் நீங்கும் என்கிறது ஆன்மீகம்.

water-for-crow

உங்கள் வீட்டில் இருக்கும் வெளிப்புற இடங்களில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை வையுங்கள்! இதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தானியத்தையும் சேர்த்து வையுங்கள். வயிறார உண்டு விட்டு, தண்ணீரையும் குடித்து விட்டு போகும் இந்த பறவைக்கு செய்த தானம் உங்களை ஏழேழு பிறவிக்கும் புண்ணியமாக தொடரும். இந்த புண்ணியம் உங்களை மட்டுமல்ல அது உங்கள் சந்ததியினரையும் தொடரும்.

- Advertisement -

அது போல் வெளியில் ஆடு, மாடு, நாய், கோழி, பூனை, காகம் போன்ற உயிரினங்கள் பசியால் தவிக்காமல் இருக்க உங்கள் வீட்டின் வாசலில் ஒரு வாலியில் தண்ணீரை வையுங்கள். ஏதாவது ஒரு மிருகம் அல்லது பறவைகள் கண்டிப்பாக அதனை குடிக்க வரும். அவற்றின் வயிறு குளிர்ந்தால் உங்களின் வாழ்க்கையும் குளிரும் என்கிறது ஆன்மீகம்.

பறவைகளுக்கு செய்யும் தானம் ஆனது பித்ருக்களுக்கு செய்யும் தானத்திற்கும் சமமாகும். நாய் பைரவர் உடைய அம்சம் என்பதால் நாய்களுக்கு தண்ணீர் வைப்பது பைரவர் உடைய அருளைப் பெற்றுக் கொடுக்கும். இரவில் நாய்க்கு மீந்து போன எச்சில் சாப்பாட்டை வைத்தால் மட்டும் போதாது! அதற்கு தேவையான தண்ணீரையும் கொடுக்க வேண்டும்.

கடும் வறட்சியை தாங்கி கொள்ள முடியாத உயிரினங்களும், பறவைகளும் நீங்கள் வைக்கும் தண்ணீரை அல்லது உணவை உட்கொண்டால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கர்மாக்கள் குறையும். இதனால் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பங்களும் குறையும்.

thanneer-panthal

அது போல மனிதர்களுக்கு பொது இடங்களில் மோர் பந்தல் வைப்பதும், தண்ணீர் பந்தல் அமைப்பது கூட பெரும் புண்ணியத்தை சேர்க்கும். இதனை செய்வதற்கு மிகப் பெரிய அளவில் பணம் ஒன்றும் செலவாக போவது இல்லை. நீங்கள் வைக்கும் நீரை ஒருவர் குடித்தால் கூட மனதார வாழ்த்தி விட்டுப் போவார்கள். அது தான் ஏழேழு பிறவிக்கும் துன்பக் கடலில் நீந்தும் கஷ்டத்தை குறைக்கும்.