வெயிலால் ஏற்படும் கருமை இரண்டே நாட்களில் நீங்க 20 வகையான எளிய குறிப்புகள்!

face13
- Advertisement -

நம் முகத்தில் இருக்கும் மெலனின் என்னும் பொருள் சருமத்தின் நிறத்தை பாதுகாக்கும் அற்புத சக்தி கொண்டதாகும். கோடை காலத்தில் சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் நேரடியாக நம் சருமத்தின் மீது படும் பொழுது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சருமத்தின் நிறத்தை கருத்து போக செய்வதோடு மட்டுமின்றி சரும புற்றுநோய் ஏற்படவும் வழிவகுக்கும். இதனால் வெயிலில் செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷன்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்படி கெமிக்கல் நிறைந்த சன்ஸ்கிரீன் லோஷன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து நம் வீட்டிலேயே எப்படி எளிமையாக முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

face11

சருமமானது சூரியனில் இருந்து வெளிவரக் கூடிய புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி அதிகமாக மெலனினை வெளியிடுகிறது. இதனால் சருமத்தின் நிறம் கருமை அடைகிறது. கருமையை தடுக்க கற்றாழை பெரும் அளவு உதவி புரியும். இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை தோல் சீவி உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு தண்ணீரில் அலசி பின்னர் குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இப்படி செய்யும் பொழுது சருமம் கருமையில் இருந்து நீங்கி இயற்கை நிறத்திற்கு பொலிவடையும்.

- Advertisement -

அதிகம் வெயிலில் அலைபவர்கள் முகம், கை, கால்கள் மட்டும் கருத்து காணப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் மூன்றிலிருந்து நான்கு முறையாவது சுரக்காய் சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி உலர விட்டு கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை எளிமையாக நீங்கும்.

mysore-dal1

துவரம் பருப்பு சிவப்பு நிறத்தில் இருக்கும் அதனை சிவப்பு மைசூர் பருப்பு என்று கூறுவார்கள். இந்த பருப்பை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி சாறு சிறிதளவு சேர்த்து குழைத்து முகம் முழுவதும் தடவி பேக் போல 30 நிமிடம் ஊற வைத்தால் இரண்டு நாட்களுக்குள் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

- Advertisement -

வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் கண்கள் மற்றும் முகம் சோர்வடைந்து இருக்கும். இது போன்ற சமயத்தில் சிறிதளவு தயிரை எடுத்து முகம் முழுவதும் தடவி பின் கை, கால்கள் என்று வெயில் படும் இடங்களிலும் தடவி உலர வைத்து கழுவினால் கருமை எங்கு போனதென்று தெரியாது மாயமாய் மறைந்திருக்கும். சூரிய காந்தி விதைகளை இரவு நேரத்தில் பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு, குங்குமப்பூ சேர்த்து பேஸ்ட் போல அரைத்து 20 நிமிடம் முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் சருமம் பட்டுப் போல ஜொலிக்கும்.

face1

பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் முகத்தில் இருக்கும் கருமையை நீக்க கூடிய ஆற்றல் கொண்டிருக்கும். முட்டைகோஸில் இலையை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அப்படியே எடுத்து முகத்தின் மீது அரை மணி நேரம் வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தின் கருமை மாறும்.

- Advertisement -

face10

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிதளவு நீரை ஊற்றினால் பேஸ்ட் போல ஆகிவிடும். அதை முகத்தில் தடவி 15 நிமிடம் வரை உலர விட்டு கழுவினால் முகத்திலிருக்கும் மாசு, மருக்கள் நீங்கி கருமை அகலும். பாலுடன் சிறிதளவு வாழைப்பழத்தை சேர்த்து குழைத்து முகம் முதல் கழுத்து வரை தடவி 20 நிமிடம் வரை உலர விட்டு கழுவினால் நல்ல மாற்றம் காணலாம். இதனை தினமும் இரண்டு முறை செய்தால் இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்கி பழைய பொலிவு மீண்டும் கிடைக்கும்.

face2

இரவு தூங்கும் முன்பு சிறிதளவு பன்னீரில் கலந்து முகம் முழுவதும் தடவி அப்படியே தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி பளிச்சென்ற முகம் ஜொலித்திடும். சூரியனில் இருந்து வெளிவரக் கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்பட்ட கருமையை நீக்க மாம்பழத்தின் உடைய தோல் பகுதியை எடுத்து பால் சேர்த்து அரைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல மாற்றம் தெரியும்.

face12

கருமையாக இருக்கும் முகம் வெள்ளையாக மாற சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தயிர் கலந்து 20 நிமிடம் உலரவிட்டு கழுவினால் நிறம் மாறுவதை நீங்களே பார்க்கலாம். சரும துவாரங்கள் இறுக்கும் அடையவும், முகத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் போன்றவை நீங்கவும் சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப்பர் ஆக முகத்தை 10 நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மனிதன் 8 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி முகத்தில் பிரச்சினைகள் உண்டாவது தடுக்கப்படும். மேலும் தேங்காய் தண்ணீர், இளநீர் போன்றவற்றை முகத்தில் 15 நிமிடங்கள் உலர விட்டு கழுவினால் முகத்தில் இருக்கும் தழும்புகள் கூட நீங்கி முகம் ஜொலிக்கும்.

- Advertisement -