கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு கடந்து போக, வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் உங்களிடம் குடியிருக்க, ஞாயிற்றுக் கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

milagu

கஷ்டங்களை நாம் கடந்து போக வேண்டுமென்றால், ‘இதுவும் கடந்து போகும்!’ என்று பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே செல்ல வேண்டும். முடிந்தவரை நடந்த கெட்ட விஷயங்களையே நினைத்துக் கொண்டு மனம் வருந்தி, கஷ்டங்களிலிருந்து வெளிவராமல், வேதனை படுவதை விட, அந்த கஷ்டமும், நம்மை கடந்து போகும் என்று நம் மனதை தேற்றிக் கொண்டு, நமக்கு நாமலே ஆறுதல் சொல்லிக் கொண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட வேண்டும். கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். இருப்பினும் நாம் கடந்து வந்த கசப்பான நாட்களுக்கு, நாம் திரும்பவும் சென்று அதை சரி செய்ய முடியாது அல்லவா?

sad

என்னதான் கஷ்டங்களை கடந்து வந்தாலும் மன தைரியத்தோடு இருந்தாலும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க ஒரு சுலபமான வழியை நம் மனம் தேடும் அல்லவா? அப்படி உங்களுக்கு ஆறுதலை கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரம் தான் இது. வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று கஷ்டம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இந்த கஷ்டம் உள்ளவர்கள் தான், இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. எல்லா வகையான கஷ்டத்திற்கும் இந்த பரிகாரம் பொருந்தும். மனக்கஷ்டம், பணக்கஷ்டம், வேலை இல்லை என்ற கஷ்டம், சம்பளம் உயர்வு இல்லை என்ற கஷ்டம், வீட்டில் சண்டை சச்சரவு, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் குழந்தை பாக்கியம் இல்லை, எதிரிகள் தொல்லை என்று உங்களைப் பிடித்து ஆட்டி படித்திருக்கும் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

Milagu benefits in Tamil

ஆனால் பல கஷ்டங்களை சொல்லி இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. ஏதாவது ஒரே ஒரு கஷ்டத்தை சொல்லி தான் இதை செய்து வர வேண்டும். வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லோரும் உறங்கச் சென்ற பின்பு, பரிகாரம் செய்பவர்கள் சமையலறையில் இருக்கும் மிளகில் இருந்து 5 மிளகை உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வீட்டு நிலை வாசலை விட்டு தாண்டி வெளியே வந்து விடுங்கள். கிழக்கு பக்கம் பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த கஷ்டம் இருக்கின்றதோ அந்த கஷ்டத்தை உங்கள் குலதெய்வத்திடம், உங்கள் கையில் இருக்கும் மிளகிடம் சொல்லுங்கள்.

kamatchi-amman7

அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்போது உள்ளங்கையில் இருக்கும் மிளகை உங்கள் தலையை 27 முறை சுற்றி அப்படியே ஒரு பேப்பரில் வைத்து மடித்து குப்பை கூடையில் போட்டு விடுங்கள் போதும். அதன் பின்பு வீட்டிற்குள் வந்து குளியலறைக்குச் சென்று, முகம் கை கால்களை கழுவிவிட்டு தூங்கச் செல்லுங்கள்.

nila-vasal

குப்பைக் கூடையை நிலை வாசலுக்கு வெளியில் வைத்து தான் போட வேண்டும். ரோட்டில் தூக்கி போடும் கூடிய சூழ்நிலை இருந்தால், கையில் இருக்கும் மிளகை வீதியில் தூக்கி போட்டு விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் தலையைச் சுற்றிய மிளகை நிலை வாசலுக்குள், வீட்டிற்குள் எடுத்து செல்ல வேண்டாம்.

sleep1

இந்த பரிகாரத்தை செய்த பின்பு நிச்சயமாக எதையோ சாதித்தது போல, ஏதோ உங்களது மனம் லேசானது போல உணர்வீர்கள். எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமைந்தது போல ஒரு உணர்வு ஏற்படும். மன நிம்மதி ஏற்படும். நல்ல தூக்கம் கிடைக்கும். நீங்கள் எந்த கஷ்டம் தீர வேண்டும் என்று நினைத்தீர்களோ அந்தக் கஷ்டங்கள் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். ஒரு வாரம் மட்டும் இதை செய்து விட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து 27 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் நல்ல பலனை உங்களால் உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.