- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதரித்திரம் நீங்க விநாயகர் விளக்கு

தரித்திரம் நீங்க விநாயகர் விளக்கு

- Advertisement -

சதா சர்வ காலமும் இறைவனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வருபவர்களுக்கு பெரும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். கடவுளை கேலி, கிண்டல் செய்பவர்கள் கூட ஓகோ.. என்று நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் முறையாக விளக்கு ஏற்றி, செவ்வாய், வெள்ளி பூஜை செய்து, கோவில் கோவிலாக சுற்றி திரியும் சிலருக்கு நல்லது என்பதே நடக்காமல், தரித்திரம் பிடித்தது போல சில சமயங்களில் ஆட்டிப் படைக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் விநாயகருக்கு எந்த விளக்கு ஏற்றுவது நல்லது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, அந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க, பல தடைகள் வரும். இந்த தடைகளை எல்லாம் பல்லை கடித்துக் கொண்டு தாண்டி வந்தாலும், ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் பொறுத்தது போதும் என்று துவண்டு விடுவீர்கள். முழு முதல் கடவுளான இந்த விநாயகப் பெருமானை வழிபட்டு வருபவர்களுக்கு சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இப்படி நம்பிக்கை இழந்து வாழ்க்கையில் தரித்திரம் பிடித்தது போல எப்போதும் கெட்டதே நடந்து கொண்டு இருந்தால் நீங்கள் இந்த வழிபாட்டை செய்வது நல்லது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள் அல்லது தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு இந்த விளக்கை ஏற்றினாலும் சரி தான். மரத்தடி பிள்ளையாருக்கு ஏற்றுவது இன்னும் சிறப்பான பலன் தரும்.

ஞாயிற்றுக்கிழமையில் விநாயகரை தேடிச் சென்று ஒரு சுத்தமான மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். வேறு எந்த எண்ணெயையும் உபயோகிக்க கூடாது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றங்கள். இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். தனித்த திரி போடக் கூடாது, இது நம்மை தனிமைப்படுத்தும்.

- Advertisement -

தீபம் ஏற்றிய பின்பு பிள்ளையாரை மும்முறை வலம் வந்து, தோப்புக்கரணம் போடுங்கள். நான் செய்த தவறுக்கு எல்லாம் என்னை மன்னித்து அருள வேண்டும் என்றும், என்னை காக்கும் கடவுள் என் நம்பிக்கையை எப்போதும் உடைப்பதில்லை என்றும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகர் கோவிலுக்கு அல்லது மரத்தடி பிள்ளையாருக்கு நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வர வேண்டும். ஒன்பது வாரங்கள் ஏற்றும் பொழுது உங்கள் வாழ்க்கையில் ஒளிவட்டம் தெரிய ஆரம்பிக்கும். இதுவரை இருந்த தரித்திரம், பீடை அனைத்தும் ஒழிந்து மெல்ல மெல்ல உங்கள் நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் விளக்கு

நடக்காத சுப காரியங்கள் கூட வீட்டில் நடக்கும். ரோக நிவாரணம் ஏற்படும், அதாவது உங்கள் உடலில் இருக்கக் கூடிய பிணிகள், நோய்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். மனோதிடமும், உடல் திடமும் உண்டாகும். வீட்டில் இருக்கும் பிள்ளையாருக்கு நல்லெண்ணெய் தீபம் போடக்கூடாதா? என்று கேட்கலாம். பிள்ளையாரை வலம் வந்து வணங்கினால் தான் அதன் பலன் முழுமை அடையும் எனவே கோவிலுக்கு அல்லது மரத்தடிக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விநாயகரை வழிபடுங்கள், நன்மைகளை பெறுங்கள்.

சற்று முன்