ஞாயிற்றுக்கிழமையில் செய்யக்கூடாத ஒரு விஷயம் என்ன? ஞாயிறு நமக்கு நன்மைகளை செய்யுமா? இக்கிழமை பற்றிய அறியாத் தகவல்கள்!

medicine-sun-sunday
- Advertisement -

ஞாயிறு என்பது சூரியனை குறிக்கிறது! ஒரு ஜாதகனுடைய ஜாதகத்தில் தலைமை பொறுப்பில் அமர்ந்து இருக்கக் கூடியவர் இந்த சூரியன். சூரியனில் ஆரம்பித்தே மற்ற கிரகங்கள் நம்மை வலம் வருகின்றன. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வெற்றிகளை தீர்மானிக்கக் கூடிய இந்த சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமையில் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

சூரியனை குறிக்கும் ஞாயிற்றுக் கிழமையில் சூரிய வழிபாடு செய்வது என்பது ரொம்பவே விசேஷமானது. முறையாக காலையில் எழுந்து சூரிய உதயத்தின் பொழுது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும். சூரிய நமஸ்காரம் செய்ய முடியா விட்டாலும் ஞாயிற்றுக் கிழமையில் கண்டிப்பாக அவசியம் தியானத்தை செய்ய வேண்டும். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை நினைத்து தியானிப்பது தியானத்தின் பலன் ஆகும்.

- Advertisement -

வீட்டில் அமர்ந்து தியானம் செய்வதை விட கோவில், நீர் நிலைகள், மலைப் பிரதேசங்கள் போன்றவற்றில் அமர்ந்து தியானம் செய்தால் பலன்கள் இரட்டிப்பாகிறது. அஷ்டமி, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய திதிகளில் தியானம் செய்வது மூன்று மடங்கு அதீத பலன்களைக் கொடுக்கக் கூடியது. எனவே ஞாயிற்றுக் கிழமையில் இந்தந்த திதிகளில் வரக்கூடிய நாட்களில் மட்டும் ஆவது நீங்கள் தியானத்தை மேற்கொண்டால் மிகவும் நன்று.

ஞாயிற்றுக் கிழமைகளில் தியானம் செய்வது மட்டுமல்லாமல், தானம் செய்வதும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக்கூடியது. பசுவுக்கு புல் கொடுப்பது அல்லது பசுவிற்கு சேவைகள் செய்வது போன்றவற்றை இந்நாளில் செய்தால் நமக்கு பதினாறு செல்வங்களும் கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு. ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்துமே இந்த 16 இல் அடங்கி விடுகிறது. எனவே ஞாயிற்றுக் கிழமையில் பசுவிற்கு தானம் செய்வது, தியானம் மேற்கொள்வது போன்றவை சிறப்பான பலன்களை அளிக்கும்.

- Advertisement -

அது போல ஞாயிற்றுக் கிழமையில் செய்யக்கூடாத மிக முக்கியமான விஷயம் தேவையற்ற பிரயாணங்களை மேற்கொள்ள முனைவது ஆகும். மற்ற நாட்களைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமையில் அத்தியாவசிய விஷயத்திற்காக மட்டுமே நீங்கள் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். காரணமற்ற பிரயாணங்கள் உங்களுக்கு நாய் படாத பாட்டை கொடுத்து விடும் என்கிற நம்பிக்கையும் நிலவி வருகிறது. இதனால் தான் ஞாயிற்றுக்கிழமை நாய் படாத பாடு என்கிற சொலவடை கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையில் முதன் முதலாக எந்த ஒரு புதிய மருந்தையும் நாம் உடலில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது ஒரு பாதிப்பிற்காக மருத்துவரை அணுகி இருந்தால் முதன் முதலில் நீங்கள் சாப்பிட கூடிய மருந்தானது ஞாயிற்றுக்கிழமையில் துவங்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமையில் துவங்கும் இத்தகைய விஷயங்கள் விரைவில் முடிவுக்கு வருவது இல்லை. தொடர் இழுபறியில் நம்மை மாட்டி விடக்கூடிய இந்த ஒரு விஷயத்தை ஞாயிற்றுக்கிழமையில் முடிந்தவரை செய்யாமல் இருப்பது நல்லது.

மேலும் ஞாயிற்றுக்கிழமையில் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக சிவப்பு நிற உடையை உடுத்திக் கொள்ளலாம். மங்களகரமான இந்த சிவப்பு நிற உடையை ஞாயிற்றுக்கிழமையில் அணிவது நமக்கு வெற்றி வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும் பெற்றுத் கூடிய ஒரு அற்புதமான பரிகாரமாக இருக்கும். தூய நிறமான வெள்ளை நிறத்திலும் நீங்கள் உடை உடுத்திக் கொள்ளலாம். சூரியனுடைய ஒளிக்கதிர்கள் நம்மை எந்த அளவிற்கு தொட்டு செல்கிறதோ, அந்த அளவிற்கு ஞாயிற்றுக்கிழமையில் உழைப்பால் உயரக் கூடிய நல்ல நாளாகவும் இருக்கும்.

- Advertisement -