சூப்பரான 5 சமையலறை டிப்ஸ். உங்க நேரத்தை மிச்சப்படுத்த, வேலையை சுலபமாக்க! மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

tip4
- Advertisement -

Tip No 1:
நம்ம வீட்ல தயிர் ரொம்பவும் புளித்துப் போய்விட்டால் என்ன செய்வோம்? அதை எடுத்து கீழே வைத்து ஊற்றி விடுவோம். வீணாக தானே போகிறது. அந்த புளித்த தயிரில் கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட் போட்டு, நன்றாக கலந்து நீங்கள் பயன்படுத்தும் வெள்ளி செயின், வெள்ளி கொலுசு இவைகளை, புளித்த தயிரில் போட்டு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊற வைத்த பின்பு, ஒரு பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு அந்த வெள்ளி பொருளை சுத்தம் செய்தால், பலபல வென பாலிஷ் போட்டால் போல் மாறிவிடும்.

Tip No 2:
நாளைக்கு பச்சை பட்டாணியை வைத்து குருமா செய்ய வேண்டுமென்றால், முந்தைய நாள் இரவே ஊறவைக்க மறந்து விடுவோம். 1/2 கிலோ அளவு பச்சை பட்டாணியை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். ஊற வைத்த பட்டாணிகளை ஒரு காட்டன் துணியின் மேல் போட்டு நன்றாக உலர வைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த பணிகளை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பேக் செய்து ஃப்ரீசரில் வைத்து விட்டால் தேவையான போது எடுத்து சமைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

Tip No 3:
சிலபேர் தேங்காயைத் துருவி வதற்கு சிரமப்பட்டு, தேங்காய் சில்களாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைப்பார்கள். ஆனால், அது சில சமயம் நன்றாக அரையாமல் உருண்டையாக நிற்கும். தேங்காய் சில்களாக எப்போதுமே நீளவாக்கில் மெல்லியதாக கட் பண்ணி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால், தேங்காய் நன்றாக அரையும்.

thengai-pall

Tip No 4:
பொதுவாகவே தேங்காய் பால் எடுப்பது கொஞ்சம் சிரமம் தான். முதலில் தேங்காய் துருவலில் தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து விட்டு, அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் திப்யோடு தான் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு கல் உப்பை போட்டு, ஒரு கலக்கு கலக்கி விட்டு, அதன் பின்பு தேங்காய் பால் எடுத்து பாருங்கள். தேங்காய் திப்பி தனியாகவும், தேங்காய்ப்பால் தனியாகவும் சுலபமாக பிரிந்து வந்து விடும். தேங்காய்ப்பாலை வடிகட்டும் போது எப்போதுமே தண்ணீர் வடிகட்டியை கொண்டு வடிகட்டினால் வேலை சுலபமாக முடிந்துவிடும்.

- Advertisement -

Tip No 5:
பூரி பொறித்த கடாய், ஃபிரெயிங் பேன் இந்த பாத்திரங்களில் எல்லாம் என்னதான் தேய்த்தாலும் எண்ணெய் பிசுபிசுப்பு போகவே போகாது. இப்படிப்பட்ட பாத்திரங்களில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு விட்டு அதன் பின்பு அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு சாதாரணமாக தேய்த்தால் எண்ணெய்ப் பிசுக்கு சுத்தமாக நீங்கி விடும்.

rice

Tip No 6:
நீங்க அடிக்கடி அசைவம் சமைத்து சாப்பிடுபவர்களா? உங்களுக்காக பிரத்தியேகமாக, இறுதியாக ஒரு டிப்ஸ். நீங்கள் அரிசியை கழுவி அதில், இருந்து வடிகட்டும் தண்ணீரை கீழே ஊற்றாமல், அகலமான ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சமையலுக்காக பயன்படுத்தும் மாமிசங்களை ஒருமுறை இந்த அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு கழுவி எடுத்தால் அதிலிருந்து தேவையில்லாமல் வரும் நீச்ச வாடை முழுமையாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -