அடிக்கடி இந்த குறிப்புகளை சமையலறையில் நிச்சயம் பயன்படுத்துவிங்க. பெண்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய 10 குறிப்புகள் இதோ.

kitchen1
- Advertisement -

அடிக்கடி சமையலறையில் இந்த குறிப்புகள் எல்லாம் இல்லத்தரசிகளுக்கு தேவைப்படும். கஷ்டப்படும் போது அப்பப்ப இந்த குறிப்பு நினைவுக்கு வந்தால் கஷ்டம் காணாமல் போகும். அப்படி என்ன குறிப்புகளாக இருக்கும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்.‌ குறிப்பை படிங்க, பிடிச்சிருந்தா மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. பிறகு நீங்க தான் வீட்டின் ஸ்மார்ட் கிச்சன் பெண்மணியாக இருப்பீங்க.

குறிப்பு 1:
சில சமயம் வாங்கிய வெல்லத்தை தூள் செய்யவே முடியாது. சிரமமாக இருக்கும். ரொம்பவும் இறுகிப்போன வெல்லத்தை காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு சிரமம் இல்லாமல் கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
அசைவம் சமைத்த பின்பு, நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கும். எல்லா இடத்திலும் முதலில் ஒரு சிறிய துண்டு புலியை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். அதன் பின்பு எப்போதும் போல வாசம் நிறைந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி கழுவி விட்டால் சுத்தமாக அசைவாடை வீசாது.

குறிப்பு 3:
வெயில் காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து போய்விடும். இப்போது எல்லாம் தயிரை பிரிட்ஜில் வைக்கின்றோம். ஆனாலும் சில பேர் மண் குடுவையில் வைத்து தான் தினமும் தயிரை சாப்பிடுவார்கள். தயிர் புளிக்காமல் இருக்க அதில் தோல் சீவியை நசுக்கிய இஞ்சி, சிறிய துண்டு, ஒரு துண்டு தேங்காய் பத்தை இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது.

- Advertisement -

குறிப்பு 4:
நெய் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமா? அந்த நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால் போதும்.

குறிப்பு 5:
சமைத்த பொறியியலில் உப்பு அதிகமாகி விட்டதா, இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டால் உப்பு சரியாகிவிடும். குழம்பில் உப்பு அதிகமாகி விட்டதா ஒரு துண்டு வெல்லத்தை சேர்க்கவும்.

- Advertisement -

குறிப்பு 7:
கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது.

குறிப்பு 8:
இளசாக வாங்கிய வெண்டைக்காய்களை உடனடியாக காம்பு பகுதியையும், தலைப்பகுதியையும் நறுக்கி விட வேண்டும். அதன் பின்பு ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்கு அடியில் ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு வெண்டைக்காய்களை அடுக்கி, மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு மூடி, பிளாஸ்டிக் டப்பாவையும் மூடி போட்டு, பிரிட்ஜில் வைத்தால் பத்து நாட்கள் வரை வெண்டைக்காய் ஃபிரஷ் ஆக இருக்கும். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் மெல்லிசான காட்டன் துணியை பயன்படுத்தலாம்.

குறிப்பு 9:
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி சூடு செய்யுங்க. இந்த சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஷாம்பு விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் கிச்சனில் பயன்படுத்தும் பிடித்துணியை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து நல்ல தண்ணீரில் அலசி எடுத்தால் போதும் கிச்சன் டவல் எந்த வாடையும் வீசாமல் சுத்தமாக இருக்கும்.

குறிப்பு 10:
சில சமயம் நாம் வைத்திருக்கும் தோசை மாவில் தோசை சரியாகவே வராது. தோசை மாவு ரொம்பவும் அடி ஆகிவிட்டது. கொஞ்சம் மாவு தான் இருக்கிறது என்றால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அந்த மாவில் தோசை வார்த்து பாருங்கள். கல்லில் தோசை ஒட்டாமலும் வரும். அதே சமயம் தோசை சாஃப்டாகவும் புளிப்பு தெரியாமலும் இருக்கும்.

- Advertisement -