இந்த தோசையை சாப்பிட்டால் எப்பேர்பட்ட தொப்பையும் 10 நாட்களில் காணாமல் போய்விடும். வெயிட் லாஸ் பண்ண, இதை விட சுலபமான வழி வேறு எதுவுமே இல்லை.

suraikai-dosai
- Advertisement -

நிறைய பேர் உடல் எடையை குறைப்பதற்கு நிறைய செயற்கையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். அது இன்றைக்கு உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். முடிந்தவரை மருந்து மாத்திரை சாப்பிட்டு உடல் எடையை குறைப்பதை விட, இயற்கையாக நமக்கு கிடைக்கும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிட்டு எடையை குறைத்துக் கொள்வதுதான் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கு அதிகப்படியான தொப்பை இருந்தால், இந்த தோசையை சுட்டு சாப்பிடுங்க போதும். சுரைக்காயை வைத்துதான் இந்த தோசையை செய்ய போகின்றோம். அரிசி சேர்க்க போவது கிடையாது. வெயிட் லாஸ் பண்ண இது ஒரு சூப்பர் டிப்ஸ். மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க.

suraikai-dosai1

முதலில் ஒரு சுரைக்காயை எடுத்து தோல் சீவி, கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டி, வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே உள்ள பஞ்சு போன்ற விதைகளை நீக்கிவிட வேண்டும். 150 கிராம் அளவு சுரக்காய்களை வெட்டி கழுவி சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் தயாராக இருக்கும் சுரக்காய் துண்டுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு சின்ன வெங்காயம் தோலுரித்து – 10, பூண்டு தோலுரித்து – 3 பல், இஞ்சி தோல் சீவி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, சீரகம் – 1/2 ஸ்பூன், இவைகளை சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீரை நிறைய ஊற்ற வேண்டாம். ஒரு குழி கரண்டி அளவு தண்ணீர் விட்டாலே போதும். தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

soraikai-dosai

இப்போது ஒரு அகலமான கிண்ணம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப், ரவை – 1/4 கப், கடலை மாவு – 1/4 கப், தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 2 சிட்டிகை, தேவையான அளவு உப்பு போட்டு, முதலில் நன்றாக உங்களது கைகளால் இந்த பொடியை கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ளீர்கள் அல்லவா, அந்த விழுதை இந்த மாவில் சேர்த்து முதலில் உங்களது கைகளைக் கொண்டு நன்றாக பிசைய வேண்டும். எடுத்த உடனேயே தண்ணீரை ஊற்றி விடாதீர்கள்.

- Advertisement -

நன்றாகப் பிசைந்து பின்பு மாவு கட்டு கட்டி ஆகாமல் ஒரு பதத்திற்கு வந்த பின்பு, தேவையான அளவு தண்ணீரை விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். எப்படி என்றால், அடை தோசை மாவு பதத்திற்கு இந்த மாவு தயார் ஆகவேண்டும். அவ்வளவு தான். தோசைக்கல்லை சூடுபடுத்தி, இந்த மாவை எடுத்து மெல்லிய முறுவலாக ஊற்ற முடியாது. அடை தோசை வார்ப்பது போல வாத்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு, மிதமான தீயில் சிவக்க விட்டு சாப்பிடுங்கள்.

kothamalli 4-compressed

நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டை குறைத்துக்கொண்டு, மதிய நேரத்தில் கூட இந்த தோசையை சாப்பிடலாம். பத்து நாட்கள் சாப்பிட்டால் தொப்பை இருந்த இடம் காணாமல் போகிறதா இல்லையா என்று பாருங்கள். இதற்கு தோதாக உங்களுடைய வீட்டில் தேங்காய் சேர்க்காமல் எந்த சட்னியை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -