வெறும் தண்ணீர் மூலம் நோய்களை தீர்க்கும் அதிசய மனிதர் – வீடியோ

Surana

இவ்வுலகம் மிகப்பெரியது ஆனால் இங்கு பிறந்து வாழும் மனிதனின் வாழ்நாளோ மிக மிக குறைந்த காலமே ஆகும். இவ்வுலகத்தில் உள்ள அத்தனை இன்பங்களை எப்படி ஒரே மனித பிறவியில் அனுபவிக்க முடியாதோ, அதுபோல இதிலுள்ள துன்பங்களையும் நாம் ஒரே பிறவியில் அனுபவிப்பதில்லை. ஊழ்வினை பயனை அனுபவிக்க நாம் மீண்டும் மீண்டும் பிறந்து,இறக்கும் கால சக்கிரத்தில் சிக்கி தவிக்கிறோம். ஆனால் தெய்வத்தின் அருளால் இந்த சுழற்சியில் இருக்கும் ஒரு சில மனிதர்களுக்கு பிற மனிதர்களின் கர்ம வினைகளை போக்கும் சக்தி கிடைக்கிறது. அப்படி சக மனிதர்களின் துயரங்களை தண்ணீர் மூலம் நீக்கும் ஒரு மனிதரைப் பற்றியறிய இக்காணொளியை காண்போம் வாருங்கள்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் இந்நபர் தான் கற்ற விஷேஷ மந்திரங்களின் மூலம், தன்னிடம் குறைகளோடு வருபவர்களுக்கு தண்ணீரை மந்திரித்து, ஆசி வழங்கி அவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறார். பிறப்பால் ஜைன மதத்தை சார்ந்த இந்நபர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்த குலத்தின் பிரதான தொழிலான அடகுக்கடை மற்றும் பணசீட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தார். தனது தொழிலை மேலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது எதிர்பாரா விதமாக மிகப்பெரும் நஷ்டத்தை அவர் சந்தித்தார். இத்தகைய பொருளாதார மற்றும் மனக்கஷ்டங்களை மறக்க தனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய சூபியிடம் சென்றார். அப்போது அந்த சூபி துறவி இவரை கண்டு இவரே பிற மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க முடியும் எனவும்,
தான் சில மந்திரங்களை கற்று தருவதாகவும் அத்துடன் அவர் சார்ந்த ஜைன மதத்தின் மந்திரத்தையும் உச்சரித்து அவரிடம் வருவோர்களின் குறைகளைத் தீர்த்து அதையே வாழ்க்கையாக மேற்கொள்ளுமாறு அருளாசி வழங்கினார்.

அப்படி பிறரின் எவ்வகையான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் இவரிடம் ஒருவர் தனக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற்பட்டதால் தான் மிகவும் பயந்திருந்த போது, இவரைப் பற்றி கேள்விப்பட்டு இவரிடம் வந்து தனது இந்நோயை தீர்த்து வைக்குமாறு வேண்டினார். அவரும் இவரின் பிரச்சனையை சரியாக அறிந்து ஒரு புட்டியில் தூய்மையான நீரை எடுத்து, சில மந்திரங்களை ஜெபித்து, அந்நீருக்கு சக்தி ஏற்றி அந்நீரை அந்த புற்று நோயாளி தொடர்ந்து அருந்துமாறு கூறினார். இதை அந்த நோயாளி செய்து வந்த சில காலத்திலேயே அவரின் சிறுநீரக புற்று நோய் முற்றிலும் நீங்கியது. இதை அவரின் மருத்துவர்களும் உறுதிப்படுத்தினர். இதற்காக தாம் என்றென்றும் தன் நோய் தீர்த்தவருக்கு தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கூறினார்.

இங்கு பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருபவர்களுக்கு, அவர்களின் அந்த பிரச்சனையின் தீவிரதன்மைக்கேற்ப அவர்களுக்கு இவர் பரிகாரம் கூறுகிறார். இங்கு நேரில் வர இயலாதவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதன் மூலமே அவர்களின் பிரச்சனைகளை இவர் தீர்த்து வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.