மகர ராசியில் அமர்ந்த சூரியன் – இதனால் உங்கள் ராசிக்கு என்ன பலன்

astrology

கடந்த 14 ஆம் தேதி சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த பயிற்சியின் காரணமாக எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamமேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த சூரியன் பெயர்ச்சி சிறப்பாகவே இருக்கும். தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்வதால் அலுவலகத்தில் நல்ல பெயர் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் பத்தாம் இடத்திற்கு வருவதால் வேலையில் உற்சாகம் பிறக்கும், தொழில் ரீதியாக செய்யும் அனைத்திலும் ஆர்வம் கூடும்.

ரிஷபம்:
rishabamஉங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான மகரத்திற்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வருவதால் மாணவர்களுக்கு நல்ல பலன் உண்டு. உயர் கல்வி பயில்வோர் சிறப்பாக செயல்படுவர். அதே போல சுக்கிரனும் ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் பெண்கள் மூலமாக அனுகூலம் உண்டு.

மிதுனம்:
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக வேலை பளு சற்று அதிகமாக இருக்கும். அலுவலக பணியில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் எட்டாம் இடத்திற்கு வருவதால் அம்மாவழி உறவுகளால்( குறிப்பாக தாய் மாமன்) சில சங்கடங்கள் வர வாய்ப்புள்ளது. சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் தேவை இல்லாமல் கடன் கொடுத்து சிக்கக்கொள்ள வேண்டாம். ஜாமீன் பத்திரங்களில் ஜாக்கிரதையாக கையெழுத்திடவும்.

கடகம்:
kadagamஉங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக சில நாட்கள் வேலை காரணமாக தொலை தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் ஏழாம் இடத்திற்கு வருவதால் தொழில் ரீதியாக நன்மை பிறக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் வாழ்க்கை துணை வழியாக நன்மை பிறக்கும்.

சிம்மம்:
simmamஉங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக மன வலிமை கூடும். எதையும் சாதித்து விடலாம் என்ற தைரியம் பிறக்கும். இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் ஆறாம் இடத்திற்கு வருவதால் தாய் மாமன் வழியில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் கவனம் தேவை. அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் அனைத்து விடயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் விஷயத்தில் தேவை இல்லாமல் தலையிட்டால் அவப்பெயர் வர நேரிடும்.

- Advertisement -

கன்னி:
kanniஉங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக பணத்தால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். நீண்ட நாட்களாக வசூலாகாத கடன் வசூலாகும். இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் ஐந்தாம் இடத்திற்கு வருவதால் ஷேர் மார்க்கெட் சம்மந்தமான தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ள பயணம் செய்வீர்கள்.

துலாம்:
thulamஉங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக வாங்கனங்கள் வாங்க வழி பிறக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு அனுகூலம் உண்டு. இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் நான்காம் இடத்திற்கு வருவதால் புதிய வீடு, மனை வாங்க வாய்ப்புகள் கூடும். அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நல்ல பலன்கள் கூடி வரும்.

விருச்சிகம்:
virichigamஉங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் உங்களுக்கு எதிர்ப்பாக சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் கவனம் தேவை. இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் மூன்றாம் இடத்திற்கு வருவதால் சிந்தித்து செய்யும் வேளைகளில் சில சிக்கல்கள் வரும். அறிவு சார்ந்த வேலை செய்வோர் ஒரு முறைக்கு இருமுறை கவனமாக பார்த்து செய்வது நல்லது. அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் சில நாட்கள் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு:
dhanusuஉங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் இரண்டாம் இடத்திற்கு வருவதால் வாக்கு வன்மை அதிகரிக்கும். அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் வருமானம் பெருகும்.

மகரம்:
magaramஉங்கள் ஜென்ம ராசிக்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவதால் புத்தி கூர்மை அதிகரிக்கும். அறிவு சார்ந்த தொழில் புரிவோர்களுக்கு ஆதாயம் கூடும். அதே போல சுக்கிர பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவதால் வாழ்வில் வசந்தம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

கும்பம்:
kumbamஉங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக தொழில் ரீதியாக சில பயணங்களை மேற்கொள்ளும் சூழல் வரும். இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் பனிரெண்டாம் இடத்திற்கு வருவதால் தொழில் ரீதியான முதலீடு அதிகரிக்கும். அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் சில செலவுகள் வரும். ஆனால் அது தேவை இல்லாத செலவாக இருக்காது.

மீனம்:
meenamஉங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்திற்கு சூரிய பகவான் வந்துள்ளார். இதன் காரணமாக அலுவலகத்தில் நல்ல சூழல் நிலவும். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உயர் பதவி வரும். இந்த மாதம் 28ம் தேதி புத பகவான் பதினொன்றாம் இடத்திற்கு வருவதால் பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அதே போல சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் சொகுசு வாகனம் வாங்குவது ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் பெருகும்.

ஜோதிடம், ஜாதகம், வார பலன், ஆன்மிக தகவல்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.