ஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் சூரியன் இப்படி இருந்தால் என்ன பலன் தெரியுமா?

suriyan

ஜோதிடக் கலையை முழுமையாக கற்பதற்கு ஒரு வாழ்நாள் போதாது என்று சொன்னாலும் மிகையாகாது. இதில் ஜாதகம் கணித்தல் என்பது ஒரு தனி ஜோதிட பிரிவாக இருக்கிறது. இதில் நவகிரகங்கள், அந்த கிரகங்கள் நின்ற இடத்துப் பலன்கள் மற்றும் எந்தெந்த கிரகங்கள் சேர்வதால் என்னென்ன பலன்கள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதில் சூரியன் கிரகம் இன்ன பிற கிரகங்களோடு சேர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஒன்பது கிரகங்களில் சூரியன் முதன்மையாக கிரகமாக இருக்கிறது. மற்ற கோள்கள் அனைத்தும் அந்த சூரியனை சுற்றி வருகின்றன. சூரியன் ஒரு நபரின் ஜாதகத்தில் இருக்கின்ற இடம் மற்றும் சேர்கின்ற கிரகங்களின் தன்மை பொருத்து பலன்களைத் தருகின்றன. இங்கே என்னென்ன கிரகங்கள் சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் என்ன பலன்கள் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம்.

சூரியனும் வளர்பிறைச் சந்திரனும் சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகன் புகழ்படைத்தவனாய் விளங்குவான்.காரியத்தில் கண்ணாக இருந்து சாதித்துக் கொள்வான். உடலும் மனமும் பலம் வாய்ந்ததாக இருக்கும் பெண்களிடம் ஈடுபாடு மிக்கவனாக ஜாதகன் இருக்கக்கூடும்

jathagam astro

சூரியனும் அங்காரகன் எனப்படும் செவ்வாயும் கூடி ஜாதகத்தில் எங்கு நின்றாலும் ஜாதகர் மிகவும் தைரியசாலியாக இருப்பார். மற்றவர்களை அதட்டிப் பேசும் தன்மை கொண்டவராக இருக்கக்கூடும். அதே நேரத்தில் ஜாதகர் தன் காரியம் முடிந்தவுடன் பிறரை கழற்றி விடும் குணமும் கொண்டிருப்பார்.

- Advertisement -

சூரியனும் அறிவாற்றலுக்கு காரகனாகிய புதனும் கூடி ஜாதகத்தில் எங்கு நின்றாலும், அந்த ஜாதகர் கூர்மையான அறிவாற்றல் உள்ளவராகவும், சிறந்த கல்விமானாகவும் இருப்பார். ஜாதகரிடம் சிறந்த தோற்றப் பொலிவு இருக்கும். மேலும் உடல் வலிமையும், மனோதிடமும் இருக்கும்

surya-viratham

சூரியனும் முழுமையான சுப கிரகமான குரு பகவானும் கூடி ஜாதகத்தில் எங்கு இருந்தாலும், அந்த ஜாதகர் செல்வந்தராகவும் அல்லது செல்வந்தர்களுடனான தொடர்பால் ஆதாயம் பெறுபவராக இருப்பார். அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாகவும், தூய்மையான உள்ளமும், உயர்ந்த குணாதிசயங்கள் கொண்டவராக ஜாதகர் இருப்பார்.

சூரியனும் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவானும் சுக்கிரனும் கூடி ஜாதகத்தில் எங்கு நின்றாலும் ஜாதகர் தன் வாழ்க்கைத் துணைக்கு மிகவும் பிரியம் உள்ளவராக இருப்பார். ஜாதகர் அவ்வப்போது பகைவர்களின் தொந்தரவுகளுக்கு ஆளாக கூடும்.

Sooriyan

சூரியனும் ஆயுள் காரகனான சனியும் கூடி ஜாதகத்தில் எங்கு நின்றாலும் ஜாதகன் அனைவரிடமும் கெட்ட பெயர் சம்பாதித்தவராக இருப்பார். மந்த புத்தியும், கல்வியறிவு குறைவாக உள்ளவராகவும் இருக்கக்கூடும். தீய மனிதர்களின் சகவாசம் கொண்டவராகவும் இருப்பார்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு ஏற்படும் கிரக தோஷங்கள் நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya graha serkai palangal in Tamil. It is also called as Graha serkai palangal in Tamil or Surya graha palangal in Tamil or Jathagam graha palangal in Tamil or Jathagathil suryan in Tamil.