நாளை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம். இந்த கிரகணம் நடைபெறவிருக்கும் சரியான நேரமும், செய்ய வேண்டிய பரிகாரமும்.

suryagrahan

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை, அதாவது 10-06-2021 ஆம் தேதி அன்று நடக்கவிருக்கிறது. இந்த கிரகணத்தின் மூலம் நமக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா? இந்த சூரிய கிரகணம் நம் நாட்டில் தெரியுமா? இந்த கிரகணத்தின் மூலம் பாதிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார்? கிரகணத்தின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? சரியாக நம்முடைய இந்திய நேரப்படி எந்த நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ இருக்கின்றது என்ற கேள்விகளுக்கான பதிலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

surya-grahan

நாளை நடைபெறவிருக்கும் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் நம்முடைய நாட்டில், அதாவது இந்தியாவில் தெரியாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் நம்முடைய நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சூரிய கிரகணத்தை நினைத்து யாரும் அஞ்ச வேண்டாம்.

ஏற்கனவே கொரோனா பீதியில் இருக்கும் மக்களுடைய மனதில் இந்த கிரகணத்தின் மூலம் வேறு ஏதும் நமக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சம் நிறையவே உள்ளது. ஆகவே, இந்த கிரகணத்தை கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை என்பதை மீண்டும் பதிவு செய்து கொள்வோம். நாளை எப்போதும் போல அவரவர், அவர்களுடைய வேலையை செய்யலாம்.

surya-grahanam

ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து போன்ற பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தெரியும். நாளை இந்திய நேரப்படி மதியம் 01.42 மணி முதல் மாலை 06.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக நாசா விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நம்முடைய இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியவில்லை என்றாலும், இந்த பிரபஞ்சத்தில் சூரியகிரகணம் நடைபெறத் தான் போகின்றது. அப்படி இருக்கும் போது, கிரகணம் முடிந்த பின்பு நம்முடைய வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா, கிரகண சமயத்தின் போது கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும், என்ற சந்தேகங்களுக்கான பதிலையும் தெரிந்து கொள்வோம்.

surya-grahanam

நம்முடைய நாட்டில் இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் இல்லை என்பதால் கர்ப்பிணிகள் இதை கண்டு பயப்படத் தேவையில்லை. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதனால், கர்ப்பிணிகள் இந்த கிரகண நேரத்தில் தாராளமாக உணவு சாப்பிடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

surya bhagavan

கிரகணம் முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. வீட்டில் உள்ளவர்களும் இந்த நேரத்தில் உணவு அருந்தலாம். தண்ணீர் குடிக்கலாம். எப்போதும் போல இயல்பாக உங்களுடைய வேலைகளை செய்து கொள்ளலாம். எந்த ராசிக்காரர்களும் எந்த பரிகாரத்தையும் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. அச்சமும் கிடையாது.

suryan

பொதுவாகவே கிரகணம் என்றால் அது பூஜைக்குரிய நேரம். அந்த நேரத்தில் இறைவழிபாடு செய்வது மிக மிக நல்லது. நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால், இறைவனை வழிபட வேண்டும் என்று நினைத்தால், இந்த கிரகண சமயத்தில் போது சூரிய பகவானை வழிபாடு செய்யலாம், சிவபெருமானையும் வழிபாடு செய்யலாம்.

Sivan-God

‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை இந்த கிரகண நேரத்தில் உச்சரிப்பது நன்மையைத் தரும். சூரிய பகவானின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இப்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இந்த உலகம் சீக்கிரமே வெளிவரவேண்டும் என்று அனைவரும் அந்த எம்பெருமானையும், சூரிய பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டு, எந்தவித பயமும் இல்லாமல் இந்த கிரகண நேரத்தில் இறை வழிபாடு செய்யலாம். மீண்டும் ஒரு முறை இந்த கிரகணத்தின் மூலம் நம்முடைய இந்தியாவிற்கும், இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும், எந்த ஒரு கிரக தோஷமும் கிடையாது, எந்த ஒரு பரிகாரமும் செய்ய தேவை இல்லை என்ற கருத்தினை முன் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.