நாளை 16/12/2021 விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான்! இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாரெல்லாம்? 12 – ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

surya-peyarchi
- Advertisement -

பிலவ வருடம் மார்கழி மாதம், ஒன்றாம் தேதி ஆகிய நாளை 3:59 மணி அளவில் விருச்சிக ராசியிலிருந்து சூரிய பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கிரகங்கள் பொதுவாக ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சுழற்சி முறையில் இடம் பெயர்ச்சி அடைவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் பெயர்ச்சி காலத்தில் ஜாதகர்களுக்கு பலன்களை மாற்றிக் கொடுப்பது வழக்கம். எனவே இந்த சூரிய பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் உண்டாகக்கூடிய அதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. தந்தையுடனான பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையத் துவங்கும். வழக்குகள், வம்புகள் போன்ற விஷயங்களில் சாதக பலன்களை பெற இருக்கிறீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி ஏற்ற, இறக்கமான பலன்களை கொடுக்க இருக்கிறது. சோர்வினை அகற்றி எப்போதும் சுறுசுறுப்பாய் செயல்படுவது ஏற்றத்தைத் தரும். தொழில் ரீதியான பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு உத்வேகம் உண்டாகும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதால் எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி தங்களுக்கு அனைத்து வகைகளிலும் ஏற்றத்தை கொடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் ரீதியான மறைமுக பிரச்சனைகள் ஒழியும். போட்டியாளர்களை தன்னம்பிக்கையுடன் வெற்றி கொள்வது உத்தமம். தேவையற்ற பயம், தேவையற்ற பதற்றம் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அதிகம் பொறுமையுடன் செயல்பட கூடிய அமைப்பாக இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அனாவசிய பிரச்சினையில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். சுயதொழிலில் தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் உயரும் யோகம் உண்டு.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. மருத்துவ ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் தேவையற்ற பிரச்சனைகளை நீக்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகள் வகையில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும். ஒரே விஷயத்தில் முடங்கிக் கிடக்காமல் உங்கள் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் படிப்படியாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அதிர்ஷ்டம் தரும் பெயர்ச்சியாக இருக்கும். இதுவரை நீங்கள் சோர்வுடன் காணப்பட்டாலும் இனி உங்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான அமைப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் யோசிக்காமல் தீர்க்கமாக எடுப்பது நல்லது. பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி வலிமையை கொடுக்கக் கூடிய அமைப்பாக இருப்பதால் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை சுலபமாக தகர்த்து எறிந்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் அளவில் மந்த நிலை காணப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று வீசும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் உண்டு.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியை உங்களுடைய முயற்சிகளுக்கு சில தடைகளை ஏற்படுத்தும். தடை தாமதங்களை தாண்டி உங்களுக்கு அதிக சாதுர்யம் தேவைப்படும். எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே வெறுப்புகளை தவிர்ப்பது நல்லது. சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி பணவரவு தொடர்பான விஷயங்களில் லாபத்தைப் பெற்றுக் கொடுக்கும். அதிகாலை சூரிய பகவான் வழிபாடு செய்வது அற்புத பலன்களை தரும். உத்தியோகத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறையும். கணவன் மனைவி பிரச்சனைக்குள் மூன்றாம் மனிதர்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவான முடிவு எடுக்கும் தைரியம் தேவை. இல்லத்தில் சுப விசேஷங்கள் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் உங்களுக்கு எதிலும் கவனம் தேவை. புதிய தொழில் துவங்குபவர்கள் ஆலோசனை தேவை. நிலம், வீடு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். நீங்கள் நினைப்பது தான் சரி என்கிற கருத்தை மாற்றிக் கொள்வது நல்லது. நல்லது எது? கெட்டது எது? என்று சிந்தித்து செயல்பட வேண்டும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் கவனத்துடன் இருப்பது நல்லது. சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அதனை கவனிக்க வேண்டும். காலம் தாழ்த்தி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன்-மனைவியிடையே பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை ஒழியும். திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -