இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டும். ஆனால், இதை மட்டும் விட்டுக்கொடுக்க கூடாது – மல்யுத்த வீரர் சுஷில் குமார்

Sushil

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

pulwama

அதன்காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரரான சுஷில் குமார் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் சுஷில் குமார் கூறியதாவது : இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தான் அணியுடனான உலகக்கோப்பை போட்டியில் ஆடவேண்டும். ஆனால், இந்திய அணி 1992 முதல் 2015 ஆம் ஆண்டுவரை உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணியுடன் தோற்றதில்லை. அதனை இந்தமுறையும் கோலியின் அணி நிரூபித்து பாகிஸ்தான் அணியை தோற்கடிக்கவேண்டும் என்று சுஷில் குமார் கூறினார்.

Pakistan

சுஷில் குமார் இந்திய நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் தேசியக்கொடியை ஏந்தி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

விளம்பரத்தில் நடித்து கொண்டிருக்கும் போது வெயில் தாங்காமல் குடை பிடிக்க சொன்ன தோனி – உதவியாளருடன் விளையாடிய தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்