சுட்ட கத்திரிக்காயில் இவ்வளவு டேஸ்டா, இவ்வளவு சுவையா குழம்பு வைக்க முடியுமா? நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

kathrikai1
- Advertisement -

கத்திரிக்காய், எப்படிப் பார்த்தாலும் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இந்த கத்திரிக்காயை கட்டாயமாக வாரத்தில் ஒரு நாள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலும் பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் கத்திரிக்காயை அப்படியே முழுதாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இதன் சுவை கொஞ்சம் எல்லோருக்கும் அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் கத்திரிக்காய் தெரியாத அளவிற்கு சுட்ட கத்திரிக்காவில் இப்படி ஒரு குழம்பு வச்சு பாருங்க. அட்டகாசமா எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

ஐந்திலிருந்து ஆறு கத்திரிக்காய்களை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். இதை நாம் முழுசாக, அதாவது வெட்டாமல் சுட போகின்றோம். ஆகவே உள்ளே பூச்சி இருந்தால் நமக்கு தெரியாது. சொத்தை இல்லாத கத்திரிக்காய் எடுத்து ஒரு பணியார குச்சியில் சொருகி அதை அப்படியே நெருப்பில் வைத்து சுட வேண்டும். தோல் அனைத்தும் கருத்துப் போய் கத்திரிக்காய் தோல் அப்படியே உருகி வரும். அப்போது கத்திரிக்காய் வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கத்தரிக்காயை சுட்டால் சரியாக இருக்கும். (நெருப்பு மூட்டி அடுப்பில் சுடலாம். அப்படி இல்லை என்றால் கேஸ் ஸ்டவ்விலேயே ஜாக்கிரதையாக சுட்டுக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

சுட்ட இந்த கத்தரிக்காய்களை ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆற வைத்த பின்பு மேலே இருக்கும் தோல் எல்லாம் நீக்கிவிடுங்கள். பிறகு இந்த சுட்டு தோல் உரித்த கத்திரிக்காய்களை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வரமிளகாய் 10 போட்டு வறுத்து அந்த மிளகாய்களை அப்படியே மிக்ஸி ஜாரில் இருக்கும் கத்திரிக்காயோடு போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம் 90% இந்த கத்தரிக்காய் மிளகாய் அரைபட்டால் போதும். இந்த விழுது அப்படியே இருக்கட்டும். (இதை ஒரு துவையல் பக்குவத்திற்கு அர்ச்சிக்கோங்க.)

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து ஒரு சிறிய எலுமிச்சம் பழம் அளவு புளிக்கரைசலை கரைத்து தாளிப்பில் ஊற்றி, 1/2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து, நன்றாக இரண்டு நிமிடம் போல கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கத்திரிக்காய் மிளகாய் விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்தால் சூப்பரான சுட்ட கத்திரிக்காய் குழம்பு தயார்.

- Advertisement -

சுட சுட சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட இது வேற லெவல் சைடிஷ். புளிப்பு உப்பு காரம் எல்லாம் இதில் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும். சுட்ட கத்திரிக்காயின் வாசம் இதில் அசத்தலாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: பெருமாளுக்கு மிகவும் பிடித்த மாவிளக்கும் பானகமும் இப்படி செய்து வைத்து தளிகை போட்டால், பெருமாளின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறலாம்.

பின்குறிப்பு: வறுத்த வர மிளகாய் சுட்ட கத்திரிக்காயையும் ஒரு அம்மியில் வைத்து அரைத்து குழம்பு வைத்தால் இன்னும் அலாதியான ருசி கிடைக்கும். அம்மி ஆட்டுக்கல் உங்கள் வீட்டில் இருந்தால் அதை இந்த ரெசிபிக்கு பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -