நாளை (17/10/2021) கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகும் சூரிய பகவான்! இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாரெல்லாம்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

surya-peyarchi
- Advertisement -

ஒவ்வொரு கிரகங்களும் பெயர்ச்சியாகும் பொழுது நமக்கு சில பலன்களை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நாளை பிலவ வருடம், புரட்டாசி மாதம், 31 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமையில் சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிற்பகல் 1:28 மணி அளவில் பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் உண்டாகக் கூடிய சாதக, பாதக பலன்கள் என்னென்ன? 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள விருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் யோகமுண்டு. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு வழி காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் சாதக பலன் கிடைக்கும். தந்தையுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் தலைமை பண்பை வகிக்க விரும்பும் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அதிகார ரீதியான விஷயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் சாதக பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி புது வெளிச்சம் பிறக்கும் அற்புத நாட்களாக இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தந்தை மகன் உறவு சிக்கல்கள் தீர்வுக்கு வரும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும். அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை விடுவதற்கு முன்பு யோசிப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. கண் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வளர்ச்சி பாதையை நோக்கிப் பயணிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. சுகபோக வாழ்க்கைக்கு உரிய ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. பிடிவாதத்தை தவிர்த்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. உங்கள் ஆன்ம பலம் அதிகரித்து இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு புகழும் பெயரும் உண்டாகப் போகிறது. விடாமுயற்சி உங்களுக்குரிய வெற்றியை ஈட்டிக் கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அரசு ரீதியான முயற்சிகளில் அனுகூலப் பலனை கொடுக்க இருக்கிறது. நீங்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு நடக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனைப் பெறுவீர்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி லட்சிய பாதையை நோக்கி பயணிக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இருண்டு கிடந்த சில பாதையில் வெளிச்சம் தோன்ற ஆரம்பிக்கும். எப்படியாவது முன்னேறி விடுவோம் என்கிற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வலதுபுற கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி இட மாற்றம் குறித்த விஷயங்களில் எதிர்பார்க்கும் அளவிற்கு பலன்களும் உண்டு. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நீங்கள் இடம்பெயர்வு முயற்சி செய்தால் நிச்சயம் அதில் கவனம் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை சுற்றி இருக்கும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வு தேவை. அரசியல்வாதிகள் தொடர்பான விஷயங்களில் தள்ளி இருப்பது நல்லது.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் உண்டாகும். இதுவரை உங்களுக்கு மக்களுடன் இருந்து வந்த முரண்பாடுகள் நீங்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெயரும் புகழும் வரக் காத்திருக்கிறது. நீங்கள் சரியான திசையில் செல்வதால் அதனுடைய பலன்களை அனுபவிக்கலாம். தந்தை மகன் உறவு சிக்கல் நீங்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அரசு அதிகாரிகள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. தேவையற்ற பேச்சு வழக்கு மற்ற வம்புகளில் மாற்றிவிடக் கூடாது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் தொடர்பான ஆலோசனைகளில் அன்புள்ள பலன் தேவை

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய முயற்சி குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை நீக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிர்வாகத் திறமை உங்களுக்கு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய முன்னேற்றம் மற்றவர்களை வியக்கும்படி செய்ய இருக்கிறது எனவே கூடுமானவரை தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து முழு உழைப்பில் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலனை பெற்றுக் கொடுக்க இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அதிக லாபம் காணலாம். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எச்சரிக்கை தேவை. தேவையற்ற பயணங்களை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை அடையலாம்.

- Advertisement -