சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

Astrology

தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும். இது ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி நட்சத்திரத்து நாளில்தான் சாத்தியமாகும் என்று ரஸகுளிகை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

swathi

பொதுவான குணங்கள்:

அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை, தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள். ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம் கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் துலா ராசியில் அமையும். துலாக்கோல் போல் நல்லது- கெட்டதை சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக் கடைப்பிடித்து, வாழ்வில் உயர்பவர்கள்.
astrology wheel

சுவாதி நட்சத்திரம் முதல் பாதம்:

இதன் ஆட்சிக் கிரகம் குரு. புத்திசாலிகள். தைரியசாலிகள், நியாயவாதிகள், பேச்சுத்திறன் உடையவர்கள், பல மொழிகளைக் கற்பார்கள். கவிதைத் திறமை இருக்கும். அழகை ஆராதிப்பவர்கள். திட்டமிட்டுச் செயல்படுபவர்கள்.

- Advertisement -

சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

இதனை ஆட்சி செய்பவர் சனி. இந்த பாதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பால் பொருளீட்டுவர். அதிகாரம் செய்வார்கள். சுயநலம் கொண்டவர்கள். சாதிக்கத் துடிப்பவர்கள். சொத்து சேர்க்கவும் விரும்புவர். தலைமைப் பண்பு மிகுந்தவர்கள். நல்ல நண்பர்களாகத் திகழ்வர்.
astrology-wheel

சுவாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம்:

இதற்கும் அதிபதி சனி பகவான்தான். இந்த பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்வம் இருக்கும். ஆழமானவர்கள்; கோபமும் மூர்க்கத்தனமும் உண்டு. அவசரமாகச் சிந்தித்து, அவசரமாக செயல்பட்டுத் தவறிழைப்பார்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆனால் பாசமும், கடமை உணர்ச்சியும் மிக்கவர்கள்.

சுவாதி நட்சத்திரம் நான்காம் பாதம்:

இதன் அதிபதி குரு. நல்ல நடத்தை, புகழைத் தேடும் உத்வேகம் உண்டு. மற்றவர்கள் மெச்ச வாழ்வார்கள். நட்பு, உறவுகளிடம் பற்றும் பாசமும் மிக்கவர்கள். ஆடம்பரத்தை விரும்புவார்கள். தெய்வ பக்தி, கடமையுணர்வு மிக்கவர்கள். உழைத்து உயர்பவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

English overview:
Swathi natchathiram characteristics in Tamil or Swathi nakshatra characteristics in Tamil is given here. Swathi natchathriam people will have good memory power and they are interested in media field. Swathi natchathiram Thulam rasi palangal in Tamil is discussed above clearly. We can say it as Swathi natchathiram palangal or Swathi natchathiram pothu palan or, Swathi natchathiram kunangal for male and female in Tamil.