வெறும் 10 நிமிடத்தில் இன்ஸ்டண்டா சூப்பர் சாஃப்ட் இனிப்பு குழி பணியாரம் செய்வது இவ்வளவு ஈஸியா? கோதுமை மாவு வெல்லம் இருந்தா போதுங்க.

paniyaram
- Advertisement -

அரிசி ஊற வைக்காமல் மாவு அரைக்காமல் இன்ஸ்டன்டாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக மிக சுலபமான முறையில் சாஃப்ட்டான இனிப்பு குழி பணியாரம் எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குழந்தைகள் மாலை நேரத்தில் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பும் போது இதை ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிப்புக்குள் செல்வோம் வாருங்கள்.

கோதுமை மாவு – 1 கப், ரொம்பவும் புளிக்காத கெட்டியான இட்லி மாவு – 1 கப், தேங்காய் துருவல் – 1 1/4 கப், உப்பு – 1 சிட்டிகை, வெல்லம் – 3/4 கப், ஏலக்காய் பொடி – 2 ஸ்பூன், இந்த பொருட்கள் நமக்கு போதும். இதை குழிப்பணியாரத்தை சுட்டு எடுக்க தேவையான அளவு எண்ணெய் தேவை. மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தயாராக எடுத்து வைத்திருக்கும் 3/4 கப் வெல்லத்தில் 1/2 கப் அளவு தண்ணீரில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். வெல்ல தண்ணீர் சூடாக இருக்கும் போதே இந்த மாவை தயார் செய்து விட வேண்டும். வெல்ல தண்ணீரை ரொம்பவும் ஆரவிட்டு விடக்கூடாது.

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, இட்லி மாவு, தேங்காய் துருவல், உப்பு, கரைத்து வைத்திருக்கும் சூடான வெல்லம், ஏலக்காய் பொடி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கட்டிகள் இல்லாமல் முதலில் ஒரு கரண்டியை வைத்து கலந்து கொடுங்கள். சூடான வெல்லத்தை ஊற்றி கையை வைத்து விடாதீர்கள். இப்போது நமக்கு திக்கான ஒரு மாவு கிடைத்திருக்கும். அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீராக கரைத்துக் கொண்டால் எண்ணெய் அதிகமாக குடிக்கும். ரொம்பவும் கட்டியாக கரைத்து விட்டால் பணியாரம் உள்ளே வேகாதது போல இருக்கும். மாவை கரைப்பதில் பக்குவம் ரொம்பவும் முக்கியம்.

- Advertisement -

இப்போது நமக்கு தேவையான மாவு தயாராகிவிட்டது. இந்த மாவை ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சோடா உப்பு சேர்க்க வேண்டாம். காரணம் லேசாக புளித்த இட்லி மாவை இதில் சேர்த்து இருக்கின்றோம். குழி பணியார கல்லை அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்துவிட்டு, எல்லா குழிகளிலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிவிட்டு, இந்த மாவை குழியில் ஊற்றி அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து மேலே ஒரு மூடி போட்டு விட வேண்டும்.

மிதமான தீயில் ஒரு பக்கம் வெந்ததும் மீண்டும் திருப்பி போட்டு பொன்னிறமாக சிவந்து வந்ததும், கல்லிலிருந்து பணியாரத்தை எடுத்து விடுங்கள். லேசாக ஆரிய பின்பு இதை ருசித்து பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும். பார்ப்பதற்கு மேலே மொறு மொறு என்று உள்ளே சாஃப்ட்டாக சாப்பிடுவதற்கு ருசியை யாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -