எந்த தமிழ் மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா ?

astrology

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் (ஏப்ரல் 15 – மே 15)

chithirai

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே ஒரு செயலை செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது செய்து முடித்தே தீர வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணம் காரணமாக அவர்கள் செய்யும் தொழிலில் எத்தகைய சவாலான வேலைகளையும் செய்து முடிப்பார்கள். சில நேரங்களில் இவர்களின் திறமையை கண்டு அடுத்தவர்கள் பொறாமை படுவதும் உண்டு. இவர்களுக்கு இயல்பாகவே மூக்கிற்கு மேல் கோவம் வரும். அதை மட்டும் கட்டுப்படுத்தினால் இவர்களின் வழக்கை சிறப்பாக இருக்கும்.

 

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் (மே 15 – ஜூன் 15)

- Advertisement -

vaikasi

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக நல்ல திறமைசாலிகளாக இருப்பார்கள். சிலருக்கு படிப்பறிவு கம்மியாக இருந்தாலும் கூட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கோபம் வராது ஆனால் வந்தால் யாராலும் இவர்களை அடக்க முடியாது. இன்பத்தையும் துன்மத்தையும் சமமாக பார்க்கும் இவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த எதையும் எளிதில் மறக்கமாட்டார்கள்.

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் (ஜூன் 15 – ஜூலை 15)

aani

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். நகைச்சுவை உணர்வை கொண்ட இவர்களின் பேச்சி அனைவரையும் மயக்கும்படி இருக்கும். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்ற துடிப்பு இவர்களிடம் எப்போதும் இருக்கும். நல்ல புத்திசாலியான இவர்கள் ஒருவேலயை செய்து முடிக்கும் முன்னரே அடுத்த வேலையில் ஈடுபடுவார்கள். இதனால் சில நேரங்களில் பழைய வேலையை முடிக்க முடியாமலே போய் விடும். இந்த குணத்தை இவர்கள் திருத்திக்கொள்வது நல்லது.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் (ஜூலை 15 – ஆகஸ்ட் 15) 

aadi

அம்மனுக்குரிய ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன் மனதிற்கு பிடித்தவர்கள் எதையாவது சொல்லிவிட்டால் அதை தாங்கும் சக்தி இவர்களிடம் குறைவு. இவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து நன்கு யோசித்து அதை சரியாக திட்டமிடும் பழக்கம் கொட்டுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு வேலையில் இறங்கி விட்டால் செல்வம் குவிய ஆரமிக்கும்.

ஆவணி மாதம் பிறந்தவர்கள் (ஆகஸ்ட் 15 – செப்டெம்பர் 15)

aavani

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக எதையும் நன்கு யோசித்து பின் அதை நிதானமாக செயல்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தான் சொல்வது மட்டுமே சரி என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுய தொழிலில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் சிக்கனமாக வாழ எண்ணுவார்கள் அதோடு கடன் வாங்குவதை இவர்கள் சற்றும் விரும்ப மாட்டார்கள். விருந்தினர்களை இவர்கள் நன்றாக உபசரிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் (செப்டெம்பர் 15 – அக்டோபர் 15)

puratasi

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் புத்திசாலித்தனம் பல நேரங்களில் வெளிப்படாமலே போய்விடும். வாழ்வில் இவர்கள் மிக விரைவாக முன்னேறுவார்கள். இவர்களின் விரைவான முன்னேற்றத்தை கண்டு பலரும் பொறாமை படவும் செய்வார்கள். யார் தவறு செய்தாலும் அதை இவர்கள் தட்டி கேட்பார்கள். இவர்கள் கண்டதை எல்லாம் சாப்பிடும் குணம் கொண்டவர்கள். அதை தவிர்த்து சத்தான மற்றும் சுகாதாரமான உணவை சாப்பிடுவது இவர்களின் உடலிற்கு நல்லது.

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் (அக்டோபர் 15 – நவம்பர் 15)

ipasi

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் உழைத்து வாழ வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள். எதையும் இவர்கள் பெரிதாக யோசித்து பெரிய திட்டங்களை தீட்டுவார்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தேவை இல்லாமல் இவர்கள் தலையிட மாட்டார்கள் ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் தானாக முன்வந்து உதவுவார்கள். இவர்களின் குணத்தால் இவர்களிடம் பல பழக விரும்புவார்கள்.

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் (நவம்பர் 15 – டிசம்பர் 15)

karthigai

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் அனுபவத்தையே மூலதனமாக இட்டு வளருவார்கள். இவர்களுக்கு கோவம் அதிகம் வந்தால் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியாது. அதனால் சில நேரங்களில் விளைவுகளும் ஏற்படும். சிறு வயதிலேயே பல சோதனைகளை சந்தித்த இவர்கள் சற்று பயந்த சுபாவதோடு இருப்பார்கள். பண விஷத்தை பொறுத்தவரை இவர்கள் சற்று அதிகமாக செலவு செய்வார்கள்.

மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் (டிசம்பர் 15 – ஜனவரி 15)

maargali

மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ எண்ணுவார்கள். இவர்கள் ஒரு காரியத்தை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் விட மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆடம்பரமாக வாழ எண்ணுவார்கள். பெரிய பிரச்சனை ஏதும் வந்தால் அப்படியே இடிந்து போகும் குணம் இவர்களுக்கு உண்டு. ஆடம்பர குணத்தை மாற்றில்கொண்டால் இவர்களின் வழக்கை சிறப்பாக இருக்கும்.

தை மாதத்தில் பிறந்தவர்கள் (ஜனவரி 15 – பெப்பிரவரி 15)

thai

தை மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே சிறிது கஞ்சத்தனத்தோடு இருப்பார்கள். எப்போதும் வருமானத்தை பற்றி மட்டுமே யோசிக்கும் இவர்கள் எதையுமே கணக்கு போட்டு அதில் லாபம் இருந்தால் மட்டுமே ஒரு ருபாய் கூட செலவு செய்வார்கள். இவர்கள் ஒரு விஷத்தை சாதிக்க நினைத்தால் அதை எப்படியாவது யாரிடமாவது சிபாரிசு கேட்டாவது சாதித்துவிடுவார்கள். தை மாதம் என்பது விவசாயத்திற்கு பேர்போனது என்பதால் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் விவசாயம் செய்தால் நல்ல வருமானம் உண்டு.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் (பெப்பிரவரி 15 – மார்ச் 15)

maasi

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் அதே சமயத்தில் இவர்களுக்கு கோவம் சற்று அதிகமாகவே வரும். இவர்களிடம் யாராலும் எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது. எந்த விடயத்தை எப்போது செய்யவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து அதை கட்சிதமாக நிறைவேற்றுவதில் இவர்கள் வல்லவர்கள். செய்யும் தொழிலை இவர்கள் மிகுந்த அக்கறையோடு செய்வார்கள்.

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் (மார்ச் 15 – ஏப்ரல் 15)

panguni

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையை ரசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் அதோடு இவர்கள் கலையை தெய்வமாக மதிப்பார்கள். பாராட்டுகளுக்கு மயங்கும் இவர்களுக்கு எழுத்து சார்ந்த துறை சிறப்பாக இருக்கும். கற்பனையில் அதிகம் மிதக்கும் இவர்கள் தங்களின் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பும் அதிகம். பல நேரங்களில் யார் கூறினாலும் எதையும் கேட்காமல் தங்கள் இஷ்டப்படியே  நடந்துகொள்ளும் குணம் இவர்களுக்கு உண்டு.

அனைத்து மாதங்களில் பிறந்தவர்களுக்கும் இந்த தமிழ் மாத ஜோதிடம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.