சுவையான பூந்தி லட்டு. பூந்தி பொரிக்காமல் மிகவும் ஈஸியாக இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்

lattu
- Advertisement -

இனிப்புகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று லட்டு. இனிப்பு பிடிக்காதவர்கள் கூட லட்டை விருப்பமாக சாப்பிடுவார்கள். நமது பாரம்பரிய உணவுகளில் லட்டும் முக்கியமான உணவுப் பொருளாகும். இப்போது நடக்கின்ற திருமணங்களில் தான் புதுவித இனிப்புகளை வைக்கின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் காலத்தில் விருந்து என்றாலே அதில் லட்டு தான் அதிகமாக இருக்கும். அதுபோல இன்று வரை திருப்பதி பெருமாள் கோவிலில் பிரசாதமாக லட்டினை தான் கொடுக்கிறார்கள். இந்த லட்டிற்கென்று தனிப்பட்ட பிரியர்கள் இருக்கின்றனர். இவ்வாறு மிகவும் சுவையான லட்டுவை எப்படி நமது வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

jilebi

தேவையான பொருட்களள்:
கடலை பருப்பு– 200 கிராம், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், கேசரி பவுடர் – கால் ஸ்பூன், முந்திரி – கால் கப், திராட்சை – கால் கப். எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 200 கிராம் கடலைப் பருப்பை இரண்டு, மூன்று முறை தண்ணீரில் நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி கடலைப் பருப்பை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.

kadalai-paruppu

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடலை மாவை சிறு சிறு துண்டுகளாக எண்ணெயில் எடுத்து போட வேண்டும். இவை சற்று நேரத்தில் நன்றாக பொரிந்தவுடன் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் பொழுததே இவற்றை வெளியில் எடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து கடலை மாவையும் பொரித்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

பொரித்த இவற்றை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை, முக்கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். சர்க்கரை நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். சிறிது நேரம் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கம்பி பதம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள கடலை மாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

sugar-pagu

5 லிருந்து 10 நிமிடத்திற்குள் சர்க்கரைப் பாகுடன் கடலை மாவு நன்றாக கலந்து கெட்டியான பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அப்பொழுது ஒரு தாளிக்கும் கரண்டியை மற்றொரு அடுப்பின் மீது வைத்து ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை நன்றாகப் பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் இவற்றை அப்படியே கடலை மாவு மற்றும் சர்க்கரை பாகில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

lattu4

பிறகு அடுப்பை அனைத்து இவற்றை சிறிது நேரம் ஆற விட வேண்டும். பின்னர் கை பொறுக்கும் சூட்டில் வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பூந்தி லட்டு தயாராகிவிட்டது. இவ்வாறு பூந்தி பொரிக்காமல் ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

- Advertisement -