சப்பாத்தி, பூரிக்கு 2 விசிலில் இப்படி ஒரு முறை சென்னா மசாலா செஞ்சு பாருங்க செம டேஸ்டாக இருக்கும்!

channa-masala-poori
- Advertisement -

சப்பாத்தி, பூரிக்கு இப்படி ஒரு முறை சென்னா மசாலா ரொம்ப சுலபமாக குக்கரில் செஞ்சு பாருங்க அடிக்கடி செய்ய ஆரம்பிப்பீங்க. பூரி, சப்பாத்திக்கு என்னடா தொட்டுக்க செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சட்டுனு நாலு பொருட்களை போட்டு வறுத்து குக்கரில் இப்படி சுவையான சென்னா மசாலா செஞ்சு கொடுத்தா எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க. டேஸ்டியான வித்தியாசமான சென்னா மசாலா எப்படி செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.

சென்னா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை மூக்கடலை – 100 கிராம், பெரிய வெங்காயம் – ரெண்டு, தக்காளி – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, வறுத்து அரைக்க: தனியா – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – நான்கு, கிராம்பு – ரெண்டு, ஏலக்காய் – 1, பட்டை – ஒன்று, தேங்காய் துண்டுகள் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

சென்னா மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் அளவிற்கு வெள்ளை மூக்கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து கொள்ளுங்கள். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் வெறும் வாணலியை வைத்து அதில் வரமிளகாயை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தனியா ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சூடு பறக்க லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுக்கப்பட்ட பொருட்களை அரைப்பதற்காக சேர்க்க வேண்டும். இப்போது மிக்ஸியை இயக்கி முதலில் ஒருமுறை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தேங்காயை ஒரு கப் அளவிற்கு சேர்த்து நைசாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை பிரஷ்ஷாக உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி அனைத்தும் நன்கு மசிய வதங்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள மூக்கடலையை சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்குங்கள் சீக்கிரம் வதங்கும்.

பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த மசாலாவை சேர்த்து தண்ணீர் எதுவும் கூடுதலாக சேர்க்காமல் மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரை மூடி உங்கள் குக்கரின் தன்மையை பொறுத்து இரண்டு விசில் அல்லது மூன்று விசில் விட்டு எடுத்தால் போதும், கிரேவியான சென்னா மசாலா சுவையாக தயார்! இதை சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் சூடான சாதம், இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிடலாம், அவ்வளவு டேஸ்டாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -