அதீத சுவை தரும் எலுமிச்சை சாதத்தை இப்படித் தான் செய்ய வேண்டுமா? இது கூட தெரியாம போச்சே!

lemon-rice-recipe1
- Advertisement -

எலுமிச்சை சாதம் கூடவா செய்ய தெரியாது? என்று பலரும் நினைக்கலாம். ஆனால் எலுமிச்சை சாதம் செய்வதிலும் ஒரு சூட்சமம் உண்டு. சாதாரண எலுமிச்சை சாதத்தை அதீத சுவை தரக்கூடிய சாதகமாக செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய எலுமிச்சை சாதம் டிபன் பாக்ஸில் லஞ்ச் ரெசிபியாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு. இந்த முறைப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள். எலுமிச்சை சாதம் சுவையாக செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் இனி தொடர்ந்து காணலாம்.

எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – 2 ஆழாக்கு, எலுமிச்சை பழங்கள் – இரண்டு, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வேர்கடலை – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, பச்சை மிளகாய் – 1, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

எலுமிச்சை சாதம் செய்முறை விளக்கம்:
எலுமிச்சை சாதத்திற்கு முதலில் இரண்டு பெரிய எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய சாறு இருக்குமாறு எடுத்துக் கொள்வது நல்லது. அதனை விதைகள் நீக்கி சாறாக பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 ஆழாக்கு அரிசியை ஊற வைத்து நீங்கள் எப்போதும் போல சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும். கலவை சாதத்திற்கு சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும் எனவே கவனமாக சாதத்தை உதிரியாக வடிக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட வேண்டும். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தோல் உரித்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். முந்திரி பருப்பு, வேர்கடலை எல்லாம் சேர்த்து செய்யும் பொழுது எலுமிச்சை சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு பச்சை மிளகாயைப் பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். 2 காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்கி அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு இது போல் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகிய இரண்டின் சுவை சாதத்தில் இறங்கும் பொழுது அற்புதமாக இருக்கும். பின்னர் எண்ணெயில் மஞ்சள் தூள் சேர்த்து வறுக்க வேண்டும். எலுமிச்சை சாதத்திற்கு நிறத்தைக் கொடுப்பது மஞ்சள் தூள் தான் எனவே சரியான அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின்னர் இறுதியாக நீங்கள் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

எலுமிச்சை சாறு சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்க கூடாது. எழுமிச்சை சாதம் செய்யும் பொழுது பலரும் செய்யும் தவறு இது தான் எலுமிச்சை சாற்றை ஊற்றிய பின்பு நன்கு கொதிக்க வைத்தால் கசக்க ஆரம்பித்து விடும். சுவையும் மாறிவிட வாய்ப்புகள் உண்டு எனவே அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். உதிரி உதிரியான சாதத்தையும் ஆற வைத்த பின்பு இந்த கலவையுடன் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு எல்லா இடங்களிலும் படும்படி கலந்துவிட வேண்டும். எலுமிச்சை சாதம் நன்கு கலந்து விட்ட பின்பு ஒருமுறை கரண்டியால் சுற்றிலும் மேற்பரப்பில் அழுத்தி விடுங்கள். பின்னர் அப்படியே மூடி வைத்து விடுங்கள். நீங்கள் சாப்பிடுவதற்கு 2 மணி நேரம் முன்பு இப்படி செய்து வைத்தால் சாப்பிடும் பொழுது எலுமிச்சை சாதத்தினுடைய சுவை அபரிமிதமாக இருக்கும்.

- Advertisement -