- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சாதம் வடிக்கும் சாப்பாட்டு அரிசியில் இந்த சுவையான வெரைட்டி ரைஸ் செய்து பாருங்கள். குக்கரை திறந்ததும்...

சாதம் வடிக்கும் சாப்பாட்டு அரிசியில் இந்த சுவையான வெரைட்டி ரைஸ் செய்து பாருங்கள். குக்கரை திறந்ததும் இதன் வாசனையில் வீடே மணமணக்கும்

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு விருப்பமாக செய்து கொடுப்பதென்பது பெற்றவர்களுக்கு சவாலான விஷயம் தான். இப்படி அவர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த உணவு கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது, இவற்றை உண்பதால் அவர்களுக்கு எந்த விதமான உடல்நல குறைவும் வந்துவிடக் கூடாது என்றெல்லாம் குழந்தைகளின் பெற்றோர்கள் யோசிப்பதுண்டு. அப்படி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், அவர்கள் விருப்பமாக சாப்பிடவும் ஒரு எளிமையான உணவை எப்போதும் சாதம் வடிக்கும் சாப்பாட்டு அரிசியிலேயே செய்ய முடியும். இதன் சுவையில் குழந்தைகள் இந்த சாதத்தை சற்றும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

health-drink1

தேவையான பொருட்கள்:
சாப்பாட்டு அரிசி – இரண்டு டம்ளர், பச்சைப்பயிறு – ஒரு டம்ளர், எண்ணெய் – 3 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பிரியாணி இலை – 2, பட்டை சிறிய துண்டு – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 3, சோம்பு – அரை ஸ்பூன், புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, கரம் மசாலா – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு பச்சைப் பயறையும் இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்க வேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

pachai-payaru

பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு குக்கரை வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய தக்காளி பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அரை கப் தயிர் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கலந்து விடவேண்டும்.பின்னர் 5 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

pachchai

தண்ணீர் நன்றாக கொதித்ததும் கழுவி வைத்துள்ள அரிசி மடற்றும் பச்சை பயிரை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 4 விசில் வரும் வரை அப்படியே விட வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து பரிமாறி கொடுத்தால் போதும். இந்த சுவையான பச்சைப்பயறு சாதத்தை விரும்பாதவர் என்று எவரும் இருக்க மாட்டார்கள்.

சற்று முன்