வழக்கமாக செய்யும் அரிசி இட்லியை தவிர்த்து விட்டு, ஒரு முறை இந்த பாசிப்பருப்பு இட்லி செய்து பாருங்க, ஆஹா! எவ்வளவு சுவை என்று அனைவரும் புகழ்வார்கள்

idli
- Advertisement -

பாசிப்பருப்பு இட்லி வழக்கமான இட்லி இருந்து மாறுபட்டு அரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் செய்யப்படுவது, அதேசமயத்தில்  மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். உடல் எடையை  குறைக்க விரும்புவர்கள் வழக்கமான உணவுகளை தவிர்த்து சத்தான அதே சமயத்தில் கேலரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்,  பாசிப்பருப்பு இட்லி எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று இட்லி மாவு இல்லாத சமயங்களில் இதனை செய்து சாப்பிடலாம். இதனை புளிக்க வைக்க தேவையில்லை பாசிப்பருப்பை மட்டும் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவரைத்து உடனே இட்லி செய்யலாம்.  பஞ்சு போன்ற பாசிப்பருப்பு இட்லியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 கப், சமையல் எண்ணெய் –  1 ஸ்பூன், கடுகு –  1/2 ஸ்பூன், கருவேப்பிலை –   சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, பெருங்காயத்தூள் –  1/4 ஸ்பூன், துருவிய கேரட் –  1/4 கப், கொத்தமல்லி –  சிறிதளவு, இஞ்சி –  1 துண்டு, உப்பு – 1 ஸ்பூன், Eno –  1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும். அதனை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின்னர்  தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் 3 பச்சை மிளகாய்  ( பொடியாக நறுக்கியது) சேர்த்துக் கொள்ளவும்.

அதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து  வறுத்துக்கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள மாவில் தாளித்தவற்றை சேர்க்கவும். அதனுடன் கால் கப் துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் மற்றும் இந்த மாவில் தேவையான அளவு உப்பு  சேர்த்து கலக்கவும்.

- Advertisement -

பின்னர் ஒரு தேக்கரண்டி Eno  மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள  மாவில் இட்லி ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

மிதமான சூட்டில் பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும். வெந்த பிறகு tooth pick  வைத்து குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் இட்லி தயார் அல்லது மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும். சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

- Advertisement -