மதிய வேளை சுடசுட சாதத்துடன் இந்த முட்டை கிரேவியை சேர்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் சாப்பிடும் அளவை விட ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து சாப்பிடுவீங்க

egg-gravy
- Advertisement -

எப்பொழுதும் மதியவேளை சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு பொறியல் என்பது இருந்துதான் ஆக வேண்டும். வெறும் சாதத்தை உண்பதற்கு பலருக்கும் பிடிக்காது. எனவே அதனுடன் பொரியல் இருந்தால் மட்டுமே அவர்கள் முழுமையாக சாப்பிட்ட திருப்தி உண்டாகும். ஆகவே ஒரு சில நேரங்களில் காய்கறி எதுவும் இல்லாமல் போனாலும் அல்லது நேரம் குறைவாக இருந்தாலும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட பலரும் உடனடியாக செய்வது முட்டையை வைத்து ஒரு பொரியல் அல்லது ஆம்லேட் தான். இவ்வாறு முட்டையில் பலவிதமான உணவுகளை சமைக்க முடியும். ஆனால் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான முட்டை கிரேவியை செய்து கொண்டால் போதும். அன்றைய வேலையே முடிந்து விடும். அதிலும் ரசம் சாதத்துடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான முட்டை கிரேவியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

food

தேவையான பொருட்கள்:
முட்டை – 5, வெங்காயம் – 4, தக்காளி – 2, மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஐந்து முட்டைகளை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வேக வைக்க வேண்டும். பின்னர் வேக வைத்த முட்டையை வெளியே எடுத்து, முட்டையின் தோலை உரித்து விட்டு ஒவ்வொரு முட்டையையும் இரண்டு பாதியாக வெட்டி வைக்க வேண்டும்.

egg

பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 7 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியைச் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். மிளகாய்தூள் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி கொண்டே இருக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும்

egg1

பிறகு கிரேவி நன்றாக தொக்கு பதத்திற்கு வந்த உடன் இரண்டாக வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக தொக்கின் மீது மஞ்சள் கரு படுமாறு கவிழ்த்துபோட வேண்டும். பின்னர் மூன்று நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும் .அதன் பிறகு திருப்பிப் போட்டு லேசாக மசாலாவை அதன் மீது தூவி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான முட்டை கிரேவி தயாராகிவிட்டது.

- Advertisement -