4 பொருள் இருந்தா போதும் நாவில் ஊறும் தேங்காய் துவையல் இப்படிக்கூட அரைக்கலாமே!

coconut-thengai-thuvaiyal2
- Advertisement -

இட்லி, தோசை மட்டுமல்லாமல் சாதத்திற்கும் சுட சுட இந்த தேங்காய் துவையல் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மணக்க மணக்க தேங்காய் துவையலை ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் நான்கு பொருட்களை வைத்து சட்டென அரைத்து விடலாம். என்னடா சமைப்பது? என்று தெரியாத பொழுது இது போல தேங்காய் துவையல் அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடக் கொடுத்தால் எதுவும் சொல்லாமல் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு விடுவார்கள். எளிதாக சுவையான தேங்காய் துவையல் அரைப்பது எப்படி? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்!

தேங்காய்

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – ஒரு மூடி, வர மிளகாய் – 6, புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பூண்டு பற்கள் -6, தளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து வர மிளகாய் – ஒன்று, பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
மணக்க மணக்க தேங்காய் துவையல் இப்படி ஒருமுறை செய்து பார்த்தால் யாருக்கு தான் பிடிக்காமல் போகும். முதலில் ஒரு மூடி அளவிற்கு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை உருட்டி எடுத்து விதை, வேர்களை நீக்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 6 பூண்டு பற்களை உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

coconut-thengai-thuvaiyal

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் வர மிளகாய் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். மிளகாய் கருகி போகாமல் வறுபட்டதும் துண்டு துண்டாக வெட்டி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நன்கு வறுத்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் நீங்கள் ஆற வைத்துள்ள இந்த பொருட்களை சேர்த்து ஒருமுறை நன்கு சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரை திறந்து அதில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் நீங்கள் ஏற்கனவே ஊற வைத்துள்ள புளியை அப்படியே தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் உரித்து வைத்துள்ள 6 பூண்டு பற்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று கெட்டியாக தேங்காய் துவையல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். துவையல் என்றாலே கெட்டியாக இருக்க வேண்டும் எனவே தண்ணீர் தேவையில்லாமல் சேர்த்து விடக்கூடாது.

coconut-thengai-thuvaiyal1

இப்போது துவையலை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அதுக்காக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, சிட்டிகை அளவு பெருங்காயம் ஆகியவற்றை தாளிப்பு செய்து துவையலுடன் கொட்டிச் சுடச்சுடப் சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

- Advertisement -