வாழைக்காய் வறுவல் 10 நிமிடத்தில் இப்படி செய்ய கறி சுவையில் அசத்தலாக இருக்குமே.

raw-banana-fry2
- Advertisement -

வாழைக்காய் வறுவல், உருளைக் கிழங்கு வறுவலை போலவே ரொம்ப ரொம்ப சுவையாக செய்யலாம். வாழைக்காய் சாப்பிட்டால் வாய்வு என்று சொல்லி அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. எல்லா காய்கறியும் ஏதோ ஒரு சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும். வாய்வை நீக்க பல வழிகள் உள்ளன. எனவே வாழைக்காயில் இருக்கும் சத்துக்களை இழக்காமல் இப்படி செய்து பாருங்கள் கறி சாப்பிடுவது போல ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். ஈஸி வாழைக்காய் வறுவல் பத்து நிமிடத்தில் எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

raw-banana

வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வாழைக்காய் – 2, பெரிய வெங்காயம் – 2, பெரிய பச்சை மிளகாய் – ஒன்று, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு – அரை டீஸ்பூன், மிளகுத் தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், இடித்த பூண்டு பற்கள் – 4, உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

வாழைக்காய் வறுவல் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். பின் இரண்டு பெரிய வாழைக்காய்களை எடுத்து தோலை சீவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் கொஞ்சம் கல் உப்பு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் வாழைக்காய் சீக்கிரமாக கறுத்துப் போகாமல் அப்படியே இருக்கும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் இந்த பாத்திரத்தை அப்படியே தூக்கி வையுங்கள். ஐந்து நிமிடத்தில் வாழைக் காய் வெந்து விடும்.

raw-banana-fry

ஒரு கத்தியை எடுத்து சொருகி பாருங்கள். கத்தி உள்ளே சுலபமாக நுழைந்தால் வாழைக்காய் வெந்து விட்டது என்பது அர்த்தம். பின்னர் அதனை வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பில் வேறொரு கடாய் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்புகளை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

- Advertisement -

பருப்பு வகைகள் பொன்னிறமாக வதங்கியதும் அதில் ஒரு கொத்து அளவிற்கு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய்கள், இடித்து வைத்த பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அதில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

raw-banana-fry1

இதன் பச்சை வாசம் போனதும் வேக வைத்து வடிகட்டி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு தூவி, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து லேசாக 5 நிமிடம் பிரட்டி கொண்டே இருந்தால் போதும். ரொம்ப ரொம்ப டேஸ்டியான கறி சுவையை மிஞ்சும் அளவிற்கு 10 நிமிடத்தில் சட்டென இப்படி ஒரு வாழைக்காய் வறுவல் நீங்கள் இதுவரை சுவைக்காத சுவையில் தயாராகிவிட்டது. நீங்களும் உங்கள் வீட்டில் இது போல் செய்து அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -