மாவு பிசையவே வேண்டாம் ருசியான கோதுமை பரோட்டா இப்படி செஞ்சா நீங்க தான் கிச்சன் கில்லாடி!

- Advertisement -

மைதா மாவு பரோட்டாவை விட இந்த கோதுமை மாவு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்தது ஆகும். சற்று பொறுமையாக செய்தால் அருமையான பரோட்டா ரெடி! மேலும் பரோட்டா செய்வதற்கு மாவை கஷ்டப்பட்டு பிசைய வேண்டிய அவசியம் கூட இல்லை. மாவு பிசையாமல் குறைந்த பொருட்களை வைத்து தோசை சுடுவது போல எப்படி கோதுமை மாவு பரோட்டா தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

கோதுமை மாவு பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், இடித்த பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், தண்ணீர் – 2 கப், உருக்கிய வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், நெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

கோதுமை மாவு பரோட்டா செய்முறை விளக்கம்:
கோதுமை மாவு பரோட்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நன்கு இடித்து மசிய வைத்த பூண்டு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு மல்லி தழையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் போல் உப்பு சேர்த்து ரெண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

மாவு நீர்க்க கோதுமை மாவு கன்சிஸ்டெண்சியில் இருக்க வேண்டும். இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணையை ஒரு தாளிப்பு கரண்டியில் போட்டு நன்கு உருக்கி கொள்ளுங்கள். இதையும் இந்த மாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். பேன் லேசான சூடாக இருக்கும் பொழுது ரெண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றி வேக விடுங்கள். தவா நன்கு சூடாகி இருக்கக் கூடாது.

- Advertisement -

சூடான பின்பு நீங்கள் ஊற்றினால் மாவு உப்பி வராது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரோட்டா செய்வதற்கு சிறிது பொறுமை தேவை. ஆனால் நல்ல சுவையாக நிச்சயம் இருக்கும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடுங்கள். ரெண்டு புறமும் லேசாக வெந்த பிறகு அடுப்பை மீடியம் ஃப்ளேமுக்கு கொண்டு வாருங்கள். இப்போது பரோட்டாவின் முனை பகுதிகளில் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சுற்றி சுற்றிவிட்டு அழுத்தம் கொடுத்து கொண்டே இருங்கள்.

அதே போல இருபுறமும் அவ்வபோது திருப்பி போட்டு விட்டு முனைப்பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது போல கரண்டியால் ஒற்றி எடுங்கள். இப்போது மாவு சப்பாத்தி போல நன்கு உப்பி வரும். உப்பி வரும் சமயத்தில் தேவையான அளவிற்கு நெய்யை விட்டு வேக விடுங்கள். இப்போது பொன்னிறமாக பரோட்டா போல வறுபட ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டியது தான். ரொம்பவே சூப்பரான டேஸ்டியான கோதுமை மாவு பரோட்டா ரெடி! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க, நீங்கள் தான் உங்கள் வீட்டில் இனி கிச்சன் கில்லாடி!

- Advertisement -