இந்த சிம்பிளான நீர் தோசையுடன் தொட்டுக்கொள்ள புதினா சட்னி சேர்த்து ஒரு முறை சுவைத்து பாருங்கள். ஒருமுறை சுவைத்து விட்டால் இதன் சுவை உங்கள் நாவிலேயே ஒட்டிக்கொள்ளும்

neer
- Advertisement -

காலை வேளையில் குறைந்த நேரத்தில் அதிக சுவையில் செய்யக் கூடிய உணவு வகைகள் பல இருக்கின்றன. ஆனால் பலருக்கும் இவ்வாறான உணவுகளை எப்படி செய்வது என்பது தெரியவில்லை. எனவே காலையில் இட்லி செய்து அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி செய்து கொடுக்கின்றனர். தினமும் இட்லி சாப்பிடுவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்றுச் சலிப்பாகவே இருக்கும். எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நினைத்தவுடனே சட்டென செய்யும் இந்த நீர் தோசையை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். அதிலும் இதனுடன் தொட்டுக்கொள்ள சுவையான கிரீன் சட்னி கொடுத்துப் பாருங்கள். இரண்டு தோசை சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப், பால் – ஒரு கப், உப்பு – 2 ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 2 பல், புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 5, பொட்டுக்கடலை – 3 ஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

கிரீன் சட்னி:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காயை கொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும் பின்னர் அதனுடன் ஒரு குத்து புதினா தழை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும் பிறகு இவற் றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் சுவையான கிரீன் சட்னி தயாராகிவிடும்.

- Advertisement -

நீர் தோசை செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கப் பால் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கப் அல்லது ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மாவினை நன்றாக கரைக்க வேண்டும்.

இந்த அரிசி மாவு கலவை எப்பொழுதும் தோசை சுடும் தோசை மாவு பக்குவத்தில் விட சற்றுக் கூடுதலான தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல் வைத்து, தோசை ஊற்றி, அதன்மீது எண்ணெய் ஊற்றி தோசை சிவந்து வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இந்த நீர் தோசையுடன் செய்து வைத்துள்ள கிரீன் சட்னி சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். இதன் சுவை நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் உங்கள் நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு அருமையாக இருக்கும்.

- Advertisement -