பாடல் மூலம் வாழ்கை ரகசியங்களை சொல்லும் சித்தர் – வீடியோ

Dhindukal Sidhar

“மனிதனும் இறைவனாகலாம்” என்பது நம் முன்னோர்கள் வாக்கு. கடும் தவம் புரிந்து, இறுதியில் ஞான நிலையடைந்து, தாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மையைத் தான் மேற்கூறிய வாக்கியமாக கூறியுள்ளனர் நம் சித்தர்களும், ஞானிகளும். அந்த வகையில் பல வருடங்களாக வெறும் டி மட்டுமே எறிந்துவிட்டு தன்னை நாடி வருபவர்களின் குறையை தீர்க்கிறார் ஒருவர். அவரை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.

பொதுவாக சித்தர்களும், யோகிகளும் தனிமையை அதிகம் விரும்பி, மக்களிடமிருந்து விலகி வசிப்பவர்கள் என நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இந்த திண்டுக்கல் நகரத்தில் பல யோகிகள் சாலையோரங்களிலும், மரத்தடி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் இடங்களிலேயே வசிக்கிறார்கள். பெரும்பாலானோர் இவர்களை மனநலம் பாதிப்படைந்தவர்கள் என எண்ணினாலும் இவர்களின் ஆன்மிக ஆற்றலை அறிந்து இவர்களிடம் தங்கள் குறைகளை நீக்கிக்கொள்ள, இவர்களின் ஆசி பெறுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு அதிசய யோகி இருக்கிறார். இவர் தன்னிடம் ஆசி பெற வரும் பக்தர்களுக்கு ஞானப் பாடல்களைப் பாடி, அவர்களை ஆசிர்வதித்து அவர்களின் குறைகளை போக்குகிறார். இவர் தான் உயிர்வாழ குறைந்த அளவில் தேநீரை மட்டுமே அருந்துவதாகவும், மற்ற எந்த உணவுகளையும் இத்தனையாண்டு காலம் இவர் உண்டதில்லை என இவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.யோகிகள் ஞானிகளின் வழிகளை முழுமையாக அறிந்தவர்கள் யாருமில்லை என்பது நிதர்சனம்.