கூந்தல் நீளமாக வளர இந்த கோயிலிற்கு காணிக்கை செலுத்துங்கள் போதும்

0
1280
kundhal

பெரும்பாலான பெண்கள், தங்களின் கூந்தல் நீளமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. ஆனால் பலவிதமான காரணங்களால் பலருக்கும் கூந்தல் நீளமாக இருப்பதில்லை. கூந்தலை நீளமாக வளரச்செய்ய ஒரு அற்புதமான கோவில் நம் தமிழகத்தில் இருக்கின்றது. வாருங்கள் அது குறித்து பார்ப்போம்.

gopuram

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள பரக்கலக்கோட்டை என்னும் ஊரில் உள்ளது இந்த அதிசய சிவன் கோவில். வாரத்தில் திங்கட்கிழமை இரவு மட்டும் திறக்கப்பட்டு விடிவதற்குள் மீண்டும் இந்த கோவில் சார்த்தபகுகிறது. அதன் பிறகு மீண்டும் அடுத்த வாரம் திங்கட்கிழமை இரவு தான் திறக்கப்படுகிறது.

இந்த கோவிலில் வீற்றிருக்கும் சிவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்றும் பொது ஆவுடையார் என்றும் பெயர்கள் உண்டு. இந்த பெயருக்கு பின்னால் ஒரு கதையும் உள்ளது. பக்தர்கள் இருவர் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இறைவனிடம் முறையிட, அதற்கு ஒரு தகுந்த தீர்ப்பு கூறும்படி இறைவனை வேண்டியுள்ளனர்.

இதனால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை முடிந்த பின்னர் சிவன் இங்கு வந்து, அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனாலேயே இங்குள்ள இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்றும் பொது ஆவுடையார் என்றும் பெயர் வந்துள்ளது.

lingam

இங்குள்ள சிவனுக்கு தென்னங்கீற்றால் ஆனா விளக்குமாரை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதனால் பெண்களுக்கு தென்னை ஓலையை போல நீண்ட கூந்தல் வளரும் என்பது ஐதீகம்.

ladies long hair

இங்கு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் பூஜை முடிந்த பிறகு, அந்த பூஜையில் கலந்து கொண்டவர்களில் யார் வயதானவரோ அவருக்கு பூஜை செய்யப்பட்ட பிரசாதத்தினை கொடுத்து மரியாதை செய்கின்றனர். இதற்கு காணிக்கையாக வெறும் ஒரு ருபாய் மட்டுமே பெறப்படுகிறது.