தாடி மீசை வளர டிப்ஸ்

thadi meesai
- Advertisement -

பெண்கள் என்றதும் அவர்களின் நீளமான கூந்தல் ஞாபகத்திற்கு வருவது போல் ஆண்கள் என்றதும் அவர்களின் மீசையும் தாடியும் தான் ஞாபகத்திற்கு வரும். அதுவும் இந்த காலத்தில் தாடி வளர்ப்பது என்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. அதிலும் பல வகைகளில் தாடியை ஷேவ் செய்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொள்கிறார்கள். தாடி இருப்பவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொள்ளலாம். தாடி இல்லாதவர்கள்? அவர்களின் கவலைகளை போக்குவதற்காகவே தாடியை வளர்ப்பதற்குரிய டிப்ஸை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக ஆண்களுக்கு தாடியும், மீசையும் வளர்வதற்கு ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் உடலில் நன்றாக சுரக்க வேண்டும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அதனால் ஆரோக்கியமான உணவுகளை உண்பதும் அதேசமயம் தண்ணீர் அதிகமாக குடிப்பதும் ஹார்மோன்களை சீராக செயல்படுவதற்கு உதவி செய்யும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதையும் மீறி ஒரு சிலருக்கு தாடி வளராமல் இருக்கும் இன்னும் சிலருக்கு ஆங்காங்கே சிறிது சிறிது முடிகளாக வளர்ந்திருக்கும் ஒரே மாதிரி தாடி வளர்ந்திருக்காது. அப்படிப்பட்டவர்கள் ஒரே மாதிரி அளவான தாடியாக வளர்வதற்கு செய்யக்கூடிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிமுறைகளை செய்வதற்கு முன்பாக தாடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை நன்றாக ஷேவ் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஷேவ் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அந்த சரும துவாரங்கள் என்பது திறக்க ஆரம்பிக்கும். அப்பொழுது தான் நாம் செய்யக்கூடிய இந்த வழிமுறைகளை நம்முடைய தோல் உள்வாங்கி அதன் செயல்பாட்டை விரைவிலேயே செய்து முடிக்கும் என்று கூறப்படுகிறது.

இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெங்காய சாரை எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று எந்த வெங்காயத்தை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து தடவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் சாராகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது நைசாக அரைத்து பேஸ்ட் போலவும் எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இந்த பேஸ்டை தாடி மீசை இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் அப்படியே மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவி விட வேண்டும். இதில் இருக்கக்கூடிய வெங்காயமும், ஆமணக்கு எண்ணையும் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய அற்புதமான பொருட்களாக திகழ்கிறது.

ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரே ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் செய்து நன்றாக கலக்க வேண்டும். கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: மருக்கள் நீங்க டிப்ஸ்

ஆண்கள் தங்களின் அழகை மெருகேற்றிக்கொள்ள வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் தாடி மீசையை வளரச் செய்யலாம்.

- Advertisement -