தை மாத ராசி பலன்கள் – 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு

Thai-matha-rasi palan

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தொழில் மற்றும் குடும்ப ஸ்தானம் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கிவிடும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். பொருளாதார ரீதியான பிரச்சனைகள் குறைந்து ஏற்றம் காணப்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குலதெய்வ வழிபாடு செய்வது மன நிம்மதியை கொடுக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் திறமைக்கு தகுந்த பலன்களும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு புதன் பகவான் வலுப்பெற்று இருப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் போகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில் ரீதியான முதலீடுகளில் எதிர்பார்த்த அளவிற்கு லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் உங்களுடைய நிராகரிக்கப்பட்ட திறமைகளும் அங்கீகரிக்கப்பட்டு விடும் காலம் இது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். பைரவரை வழிபடுங்கள் தெளிவு பிறக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்களைக் கொடுக்க போகின்றது. உங்கள் ராசிக்கு புத பகவான் சூரியனுடன் இருப்பதால் அரசு தொடர்பான வேலையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சுயதொழில் புரிபவர்கள் பெரிய தொகையை முதலீடு செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் பல சிக்கல்களை சந்தித்து தான் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக அமைய இருக்கின்றது. உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் புத பகவான் உடன் குரு சனி சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து இருப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாகவே நடைபெறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேற கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த முயற்சியில் லாபம் தரும் வகையான அமைப்பு இருக்கிறது. உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தயக்கமில்லாமல் தன்னம்பிக்கையோடு தெளிவாக முடிவெடுப்பது நல்லது. ராகு கால துர்க்கை பூஜை மேற்கொள்ளுங்கள் நன்மைகள் பிறக்கும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் நன்மைகளை அடைய போகின்றீர்கள். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்திருந்தாலும் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் இனி வரும் காலங்களில் நீங்கி சுமூகமாக முன்னேறுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சமூகத்தின் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி நல்ல விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்கள் இறை வழிபாடுகளில் ஆர்வத்தை செலுத்தினால் மன அமைதியை பெறலாம். முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கின்றது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை பண வரவு சிறப்பாக அமையப் போகிறது. எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு உண்டாகும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது உத்தமம். சுய தொழிலில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதால் உங்களுடைய தொழிலில் முன்னேற்றத்தை எளிதாக காண முடியும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து சென்றால் புதிய புரிதல் உண்டாகும். முருகன் மந்திரங்களை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரியுங்கள் ஏற்றம் காணலாம்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உழைப்பிற்கேற்ற பலன்களையும் அனுபவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெற்று மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசுவது மனம் அமைதி பெற வழிவகை செய்யும். வார்த்தைகளில் நிதானம் இருந்தாள் குடும்பத்தில் அமைதியும் இருக்கும். இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து எந்த ஒரு செயலையும் துவங்குங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிக்கு சூரியன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் உழைப்பிற்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். மற்றவர்களுடன் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். அடுத்தவர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளில் நிதானம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிக்கல்கள் நீங்கி பரஸ்பர அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நரசிம்மரை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான முன்னேற்றத்தை காணும் நேரம் ஆக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் இருக்கும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் இடமாற்றம் சாதக பலன்களை கொடுக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் தரும் வகையில் இருப்பதால் பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மனதில் நினைத்த காரியங்கள் நடைபெறும் யோகம் உண்டு. படம் வீடியோ தமிழ்ல எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் மிகவும் நல்லது. குரு பகவானை வழிபட்டால் சுபகாரியங்கள் கைகூடி வரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஓய்வின்றி உழைக்க கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள். தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைத்து பெருமிதம் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். இருக்கும் கடன்களை மீறி புதிதாக கடன் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து வாருங்கள் நல்லது நடக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுப யோகங்கள் கூடி வரும் அற்புதமான மாதமாக அமைய இருக்கின்றது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் மனதிற்கு பிடித்த நல்ல விஷயங்கள் நடைபெறும். பெற்றோர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான சிக்கல்களை எளிதாக சமாளிக்க முடியும். வரவிற்கு ஏற்ற செலவும் வந்து சேரும் என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நன்மைகள் தரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்க்காத நல்ல விஷயங்களை தரக்கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் குறையும் வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். இது வரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் வழியே இருந்து வந்த உறவு சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை நீடிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. லட்சுமி தேவியை வழிபட பணவரவு தடையின்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
வருமான தடை நீங்கி செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? நீங்களும் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.