- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதை மாதத்தில் போட வேண்டிய கோலம்

தை மாதத்தில் போட வேண்டிய கோலம்

- Advertisement -

நம்முடைய தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்ததாக இருந்த போதிலும் தை மாதம் தனி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகையால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லாடல் நம்முடைய வழக்கத்தில் உள்ளது. அப்படியான சிறப்பு மிக்க தை மாதத்தில் நாம் செய்யும் சில காரியங்கள் நம்முடைய வீட்டில் சுப நிகழ்வுகள் செல்வ செழிப்புகள் போன்றவற்றை அதிகரித்து தரும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் நமக்கு பொன்னையும், பொருளையும் அள்ளித் தரக்கூடிய ஒரு சூட்சம பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செல்வம் பெருக தை மாதம்

தை மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதற்கு முக்கிய காரணமே தைப்பொங்கல். நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய உழவர்களுக்கும் உழவுக்கும் நன்றி செலுத்தக்கூடிய ஒரு பொன்னால் இந்த தைத்திருநாள். இந்த நாளில் நம்முடைய உழவரகளுக்கு மட்டுமின்றி சூரிய பகவான் உழவுக்கு துணை நிற்கும் கால்நடைகள், பூமித்தாய் அனைத்திற்கும் நாம் நன்றி செலுத்துவோம். ஆகையாலேயே இந்த மாதமானது பெரும் விசேஷ தரமானதாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த மாதத் தொடக்கத்தின் தொடக்க நாளான தைத்திருநாள் அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மிகப்பெரிய அளவில் கோலங்கள் போட்டும் வண்ணங்கள் தீட்டியும் பொங்கலை வரவேற்பது நம்முடைய வழக்கம். இந்த முறை கிராமத்தில் இன்னும் விசேஷமாக கடைபிடிக்கப்படும். அதுமட்டுமின்றி கோலம் போடுவது என்பது நம்முடைய வழிபாட்டு முறைகளில் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. ஏனெனில் தெய்வங்கள் நம் வீட்டிற்கு வருவதற்கான ஒரு வரவேற்பாகவே இந்த கோலங்கள் கருதப்படுகிறது.

தெய்வங்கள் உள்ளே வரவும் தங்கவும் ஏதேனும் ஒரு எந்திர வடிவம் தேவைப்படுகிறது. அந்த எந்திர வடிவம் தான் இந்த கோலம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் நம்முடைய வீட்டு வாசலில் தினந்தோறும் கோலம் போடும் வழக்கம் நம்முடைய வழக்கத்தில் உள்ளது. அமாவாசை காலத்தில் இந்த கோலம் போடும் முறையை தவிர்ப்பதும் அதற்காகத்தான். ஏனெனில் அன்றைய நாளானது நம் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வரக்கூடிய நாள் என்றும், கோலம் போட்டால் தெய்வங்கள் வரும் நாம் செல்லக்கூடாது என்று முன்னோர்கள் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் அமாவாசை தினத்தில் கோலம் போடக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி நம்முடைய வாழ்வில் நெருங்கிய தொடர்புடைய கோலத்தை இந்த தை மாதத்தின் முதல் நாள் மட்டுமல்லாது மாதம் முழுவதும் போடுவது மிகவும் சிறந்தது. அதை எப்படி போடுவது என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மையும் தான் இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். தை மாதம் முழுவதும் வாசலில் கோலம் போடுவதற்கு முன்பாக மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இதை வருடம் முழுவதும் கூட செய்யலாம். ஆனால் இந்த தை மாதத்தில் நிச்சயமாக செய்ய வேண்டும் என்று ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது.

அப்படி மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்த பிறகு கோலம் போட வேண்டும். முடிந்த அளவிற்கு அரிசிமாவினால் கோலம் போடுவது சிறந்தது. மேலும் அப்படி போடப்படும் கோலமானத்தில் கட்டம் இருக்கும்படி போடுவது சிறந்தது. கோலங்கள் எந்த வகையானதாக இருந்தாலும் கூட அதில் ஏதாவது ஒரு கட்ட வடிவம் வருவது போல் போட வேண்டும். அதேபோல் கோலத்தில் நடுவில் பச்சை நிற வண்ணத்தை தீட்ட வேண்டும். இது ஒரு நாள் மட்டுமல்ல தை மாதம் முழுவதும் இப்படி வண்ணம் தீட்டியும் கட்டம் சேர்த்தும் கோலம் போட வேண்டும்.

இந்த முறையில் கோலம் போடும்பொழுது மகாலட்சுமி தாயார் விருப்பத்தோடு நம் வீடு தேடி வருவார் என்று சொல்லப்படுகிறது. அரிசிமாவினால் போடப்படும் இந்த கட்டம் எந்திரம் ஆகவும், அதில் தீட்டப்படும் பச்சை நிறம் அன்னைக்கு உகந்த அதே போல் அன்னையே நம் வீட்டிற்கு வரவேற்கும் விதமாகவும் அமையும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பச்சை நிறமானது மகாலட்சுமி தாயார் குபேரர் போன்ற செல்வாதிபதியான தெய்வங்களுக்கு உகந்த நிறமாக கருதப்படுவதே இதற்கு காரணம்.

இதையும் படிக்கலாமே:சிறந்த கல்வியைப் பெற சரஸ்வதி வழிபாடு
அன்னையின் அருட்பாவை கிடைத்தாலே நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் தூர ஓடும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்த கோலத்திற்கும், நிறத்திற்கும் அன்னை நம் வீடு தேடியே வருவார் என்றால் நம்முடைய வீட்டின் நிலை நிச்சயம் நல்ல நிலைமைக்கு மாறும் என்று நம்பப்படுகிறது. எந்த சூட்சம பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் தை மாதத்தின் வீட்டு வாயிலில் போடும் கோலத்தை இந்த முறையில் போட்டு அன்னையின் அருள் ஆசையை முழுமையாக பெறலாம் என்று இந்த தகவலோடு பதிவினை முடிவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்