வரப்போகும் பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச விரத நாள் வர இருக்கிறது. இந்த நாள் முருகனுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்த நாள். இந்த தைப்பூசத்திற்காக நிறைய பேர் மாலை அணிந்து கொண்டு முருகனுக்கு விரதம் இருப்பார்கள். உங்களால் மாலை அணிந்து கொண்டு முருகனுக்கு விரதம் இருக்க முடியவில்லை.
அந்த பாக்கியத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால், இதோ இன்னொரு பாக்கியத்தை உங்களுக்காக கொண்டுவந்து உங்கள் கையில் சேர்த்துள்ளான் கந்தக் கடவுள். நீங்கள் முருகனுக்கு மாலை போட்டு விரதம் இல்லை என்றாலும் சரி, தினமும் மாலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி முருகனை நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலே முருகனின் அருள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய மனதிற்குள் அந்த முருகன் வந்து குடியேறுவான். அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
முருகனுக்கு உகந்த பல பாடல்கள் இருக்கிறது. பலவிதமான மந்திர உச்சாடனங்கள் இருக்கிறது. அதெல்லாம் பின்பு பார்க்கலாம். ஆனால் முருகரை நினைத்து மிக மிக சுலபமாக சொல்லகூடிய மந்திரம் என்றால் அது “ஓம் சரவணபவ” மந்திரம் தான். முடிந்தால் பூஜை அறையில் தினமும் 6 விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வரும் தைப்பூசம் வரை முருகனை உங்கள் வீட்டிற்கு அழைத்து பாருங்கள். பிறகு உங்கள் வீடு முழுவதும் அந்த முருகனின் ஸ்பரிசம் நிறைந்திருக்கும். உங்கள் வீட்டில் முருகன் நடமாடுவதை கூட உங்களால் உணர முடியும்.
உங்களுக்கு நேரம் இருக்கிறது எனும் பட்சத்தில் கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், வேல்மாறல் இது போன்ற பாடல்களை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறை, ஒவ்வொரு பாடல்கள் என்ற கணக்கில் கூட, படிக்கலாம். தவறு கிடையாது. முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்யும்போது முருகனை விட மிக மிக முக்கியமாக நாம் இன்னொருவரை வழிபாடு செய்ய வேண்டும். அது யாரு தெரியுமா. வள்ளி பிராட்டியார்.
முருகன் கூட, சில சமயங்களில் சில விளையாட்டுகளை, நம்மிடம் செய்து பார்ப்பார். சில வரங்களை கேட்கும்போது உடனே கொடுத்து விடுவார், சில வேண்டுதல்களை வரமாக கேட்கும் போது, கொடுக்க மாட்டார். கொஞ்சம் விளையாட்டு காட்டுவார். ஆனால் வள்ளியம்மையார் அப்படி கிடையாது. முருகனுடைய அருள் எனக்குத் தேவை என்று, வள்ளியம்மையை வேண்டி கேட்டால், முருகப்பெருமானுடைய அருளை சுலபமாக நம்மால் பெற முடியும்.
காரணம் எல்லோர் வீட்டிலும் அது தானே இப்போது நடக்கிறது. மனைவி சொன்னால், கணவன் கேட்டுத்தான் ஆகவேண்டும். இந்த கலியுகத்திலும் இந்த வழிபாடு உங்களுக்கு உடனடியாக கைகொடுக்கும். அந்த வள்ளி பிராட்டியை போற்றக்கூடிய ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடலையும் படிக்கலாம் அது என்ன பாடல் தெரியுமா.
வேல்மாறல் பாடல் வரிகள்
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்கு நிகராகும்
திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
கொஞ்சம் தினை மாவையும், தேனையும் நெய்வேதியமாக வைத்துவிட்டு, வள்ளியை நினைத்து வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பாடலை பாடி வழிபாடு செய்தால், முருகனின் அருளை பெறாமல், இந்த பூஜை நிறைவு பெறாது. ஏனென்றால் அவ்வளவு ஸ்ட்ராங்கான ரெக்கமன்டேஷன் தான் வள்ளியம்மையார். எல்லோருக்கும் புரியும் படி சொல்ல வேண்டும் அல்லவா.
இதையும் படிக்கலாமே: தைப்பூச விரதம் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்
அதற்காகத்தான் இப்படி ஒரு எடுத்துக்காட்டு. உங்களுக்கும் இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால் தைப்பூசம் வருவதற்குள் 3 நாட்கள், 6 நாட்கள் மேல் சொன்னபடி வழிபாட்டை செய்து பாருங்கள். இந்த பிறவி பயனை அடைவீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.