1 மாதம் ஆனாலும் தக்காளி அழுகாமல் இருக்க 1 சொட்டு எண்ணெய் போதுமே! தக்காளியை பாதுகாக்க இதைவிட பெஸ்ட் ஐடியா கிடையாது.

tomato-oil

தக்காளி ஒருநாள் இருக்கும் விலை இன்னொரு நாள் இருப்பதில்லை. நாளுக்கு நாள் மாறும் தக்காளியின் விலை சில சமயங்களில் நம்மை அச்சுறுத்த கூட செய்திருக்கிறது. தக்காளி விலை குறைவாக விற்கும் பொழுது அதனை மொத்தமாக வாங்கி வைப்பது உண்டு. அதைக்காட்டிலும் பெரும்பாலானோர் காய்கறிகளை வாரம் ஒரு முறை வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கி வைத்து விடுவதும் உண்டு. இப்படி நிறைய நாட்களுக்கு காய்கறிகள் வாங்கி வைப்போர் அதனைப் பாதுகாக்கும் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில் தக்காளியை நீண்ட நாள் பாதுகாப்பாக வைக்க என்ன செய்யலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

tomato-grow3

தகதகவென இருக்கும் தக்காளி பழம் வாங்கிய கொஞ்ச நாட்களில் அதன் பொலிவை இழந்து சுருங்க ஆரம்பித்துவிடும். தக்காளியை அதிகபட்சம் ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம் அவ்வளவு தான். அதற்கு மேல் தக்காளியில் பயன்படுத்துவது கூடாது. உணவில் அடிக்கடி தக்காளியை சேர்த்து வந்தால் நம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தக்காளியில் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. தக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண்பார்வை பிரச்சினைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது இதிலிருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாக்குகிறது.

வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து சமமாக தக்காளியில் இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. மாவுச்சத்து குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட சாப்பிடலாம். தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்படையும். மேலும் தக்காளி சாறு முகத்திற்கும் பொலிவை கொடுப்பது ஆகும். வெயிலில் சென்று வந்தால் கருமை நீங்கும், மாசுமருவற்ற முகத்தை ஜொலிப்பாக வைத்துக் கொள்ளவும் தக்காளி சாறை சருமத்தின் மீது தடவி உலர விட்டு கழுவலாம். இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டுள்ள தக்காளியை எப்படி நாம் நாட்கணக்கில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது?

tomato

நீங்கள் தக்காளியை வாங்கி வந்தவுடன் காய் மற்றும் பழத்தை தனித்தனியாக பிரித்து வைத்து விடுங்கள். ஒவ்வொரு தக்காளியையும் நன்கு கழுவி ஃபேன் காற்றில் காய விடுங்கள். தக்காளியில் இருக்கும் ஈரப்பதம் நீங்கியவுடன் நன்கு துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி வேகமாக அழுகுவதற்கு காரணம் தக்காளி பழத்தில் இருக்கும் காம்பு பகுதி தான். காம்பு பகுதி இருக்கும் வட்டவடிவமான இடம் மிகவும் மென்மையானது. இதன் மூலம் செல்லும் காற்று தக்காளியை வேகமாக அழுகிப் போக செய்கிறது.

எனவே தக்காளியில் இருக்கும் அந்தப் பகுதியில் காற்று புகாதபடி லேசாக ஒரு விரலால் சமையல் எண்ணெயைத் தொட்டு வைக்கலாம். இப்படி செய்வதால் காற்று வேகமாக தக்காளியினுள் நுழைய முடியாது. மேலும் தக்காளியை நீங்கள் வைக்கும் பொழுது தலைகீழாக கவிழ்த்து தான் வைக்க வேண்டும். பாலித்தீன் பையில் வைத்தாலும், கூடையில் வைத்தாலும் தலைகீழாக கவிழ்த்து அடுக்கி வையுங்கள். இப்படி செய்தால் இருபது நாட்களானாலும் தக்காளி அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

tomato

இப்படி செய்யும் பொழுது தக்காளியை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. பிரிட்ஜ் இல்லாதவர்கள் வெளியிலே இப்படி செய்து வைத்துக் கொள்ளலாம். தக்காளி கெட்டுப் போகாமல் இருக்க இன்னொரு வழியும் உண்டு. எண்ணெய்க்கு பதிலாக அந்த இடத்தில் மட்டும் வெள்ளை செலோடேப் போட்டு ஒட்டி வைத்து விடலாம். இப்படியும் ஒரு சிலர் செய்வது உண்டு. எப்படியாவது அந்த இடத்தை நாம் அடைத்து வைத்து விட்டால் அதன் மூலம் காற்று புகாமல் தக்காளி வேகமாக அழுகுவது தடுக்கப்படும் அவ்வளவு தான்.