சப்பாத்தி, நாண், பரோட்டா இட்லி தோசை இதற்கெல்லாம் தொட்டு சாப்பிட நல்ல கெட்டியான தக்காளி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். இதனுடைய வாசமும் சுவையும் அவ்வளவு அசத்தலாக இருக்கும்.

kuruma2
- Advertisement -

சில போர் சமைக்கும்போதே அவர்கள் சமையலில் இருந்து வெளிவரக்கூடிய வாசமே பசியை தூண்டும். அந்த அளவுக்கு மணக்க மணக்க சமைப்பது கூட ஒரு கலைதான். இன்று நாம் பார்க்கப் போகும் இந்த தக்காளி குருமாவை உங்களுடைய வீட்டில் வைத்தால் இதனுடைய வாசம் கூட அப்படித்தான் வீசும். வீட்டில் இருப்பவர்கள் எப்போது இந்த தக்காளி குருமாவை ருசிக்கலாம் என்று நினைப்பார்கள். அந்த அளவுக்கு சுவை நிறைந்த வாசம் நிறைந்த தக்காளி குருமா ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. வாங்க பதிவிற்குள் செல்வோம்.

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, சோம்பு – 1 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் – 1/2 ஸ்பூன், தாளித்து, பிரியாணி இலை – 1, கல்பாசி – 1, ஜாதி பத்திரி – 1, போட்டு தாளித்து மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயத்தின் நிறம் மாறி வந்தவுடன் தோல் உரித்து இடித்த – 5 பூண்டு பல் சேர்த்து வதக்குங்கள்.

பிறகு கருவேப்பிலை ஒரு கொத்து போடவும். அடுத்தபடியாக தான் மிகப்பொடி ஆக நறுக்கிய- 6 தக்காளி பழங்களை சேர்த்து எண்ணெயிலேயே 2 நிமிடம் போல வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அடுத்து கிரேவிக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கலந்து ஒரு மூடி போட்டு 10 நிமிடம் வதங்கிய தக்காளி பழத்தை வேக வைக்கவும். அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை கடாயில் ஊற்றி கலந்து விடுங்கள். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த கிரேவி ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. கொஞ்சம் திக்கான பதத்தில் இருந்தால் நல்ல ருசி தரும். அப்படியே மேலே எண்ணெய் மிதந்து வரும் அளவிற்கு எண்ணெயையும் ஊற்றிக் கொள்ளவும். இப்போது அரைத்த மசாலா விழுது, கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் மற்றும் மசாலா பொருட்கள் எல்லாம் சேர்ந்து கொதிக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மூடி போட்டு கொதிக்க விட்டு இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி ஸ்டவ்வை அனைத்தால் மணக்க மணக்க ஒரு தக்காளி கிரேவி அல்லது தக்காளி குருமா தயார்.

இதையும் படிக்கலாமே: வீட்ல தக்காளி இருந்தா கறி குழம்பை மிஞ்சின டேஸ்ட்ல இந்த தக்காளி கறியை செஞ்சு கொடுங்க. இட்லி, தோசை பூரி சப்பாத்தி என எல்லாத்துக்கும் அட்டகாசமான இந்த சைடு டிஷ்சை எல்லாம் விரும்பி சாப்பிடுவாங்க.

உங்கள் விருப்பம்தான். எந்த பெயர் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். இது அவ்வளவு அருமையான சைடு டிஷ் ஆக இருக்கும். இந்த தக்காளி கிரேவிக்கு தேங்காய் அரைவை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்க வேண்டும். தக்காளியின் சுவை தூக்கலாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த ருசி தரும் ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -