- Advertisement -
Homeமந்திரம்தலையெழுத்தை மாற்றும் சிவ ஸ்தோத்திரம்

தலையெழுத்தை மாற்றும் சிவ ஸ்தோத்திரம்

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் பலவிதமான பண்டிகைகள் வரும். இருப்பினும் மிகவும் புத்துணர்ச்சிடனும் அதிக அளவு சந்தோஷத்துடனும் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகையாக தான் தீபாவளி திருநாள் திகழ்கிறது. இந்த நாள் கொண்டாட்டத்திற்கு மட்டும் இல்லாமல் தெய்வீக வழிபாட்டிற்கும் பரிகாரங்களுக்கும் அதிக அளவில் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட தீபாவளி இந்த வருடம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வருகிறது. திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய கிழமை என்பதால் அன்றைய நாளில் நாம் சொல்ல வேண்டிய ஒரு சிவ ஸ்தோத்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தலையெழுத்தை மாற்றும் சிவ ஸ்தோத்திரம்

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாக கருதப்படுகிறது. அந்த கிரகங்களுக்குரிய அதி தேவதையை நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்தின் அருளையும் அந்த கிரகத்தின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அதுவும் விசேஷ மிகுந்த சிறப்பான நாட்களில் நாம் கூறும்பொழுது அதற்கு அதிக அளவு பலன் கிடைக்கும் என்று கூறலாம். அதனால் தான் விசேஷமான நாட்களில் பலவிதமான வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நம்முடைய முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அக்டோபர் மாதம் இருபதாம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை என்பதால் அன்றைய தினம் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் மதியத்திற்கு மேல் தான் கேதார கௌரி விரதமும் தொடங்குகிறது என்பதால் சிவபெருமானுக்கு அதீத அற்புதமான நாளாக அன்றைய நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் 21 முறை மட்டும் பின்வரும் இந்த ஒரு சிவ ஸ்தோத்திரத்தை கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இதுவரை நாம் அனுபவித்த அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். நம்முடைய மோசமான தலையெழுத்தும் மாறும். இந்த மந்திரத்தை சுத்தமாக இருக்கக்கூடியவர்கள் தான் கூற வேண்டும். மேலும் இந்த மந்திரத்தை அசைவத்தை சாப்பிட்டுவிட்டு கூறக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தீபாவளி நாள் முழுவதும் விடிய காலையிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ராகுகால எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டு பூஜை அறையில் சிவபெருமானுக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அங்கேயே கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கண்களை மூடி சிவபெருமானை மனதிற்குள் கொண்டு வந்து பின்வரும் இந்த ஒரு சிவ ஸ்தோத்திரத்தை 21 முறை கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய தலையெழுத்து மாறும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் நமஸ்தே அஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய,
மஹாதேவாய,
த்ரயம்பகாய,
த்ரிபுராந்தகாய,
த்ரிகாலாக்கினி காலாய,
காலாக்னிருத்ராய,
நீலகண்டாய,
ம்ருத்யுஞ்ஜயாய,
ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய,
ஸ்ரீமன் மஹாதேவாய நம “

இதையும் படிக்கலாமே: பாவங்களை நீங்கி செல்வ வளத்தை தரும் மந்திரம்

சிறப்பான தீபாவளி நாளன்று இந்த ஒரு சிவ மந்திரத்தை 21 முறை முழு மனதோடு சிவபெருமானை நினைத்து கூறுபவர்களுக்கு அவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்