தீராத நோய் தீர, இன்னல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ, நம் தலையெழுத்தை அந்த பிரம்ம தேவரின் கையால் நல்லபடியாக மாற்றி எழுத, உச்சரிக்க வேண்டிய மந்திரமும் வழிபாட்டு முறையும்.

bramma
- Advertisement -

நம்முடைய கர்மவினைகளை பொருத்து நம்முடைய தலையெழுத்து எழுதப்படுகின்றது. நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப, அந்த பிரம்ம தேவன் நம் தலையெழுத்தை எப்படி எழுதி இருந்தாலும் சரி, அந்த தலை எழுத்தை மீண்டும் சரியான முறையில் திருத்தி எழுத கூடிய, சக்தி பிரம்ம தேவருக்கு மட்டுமே உள்ளது. பிரம்மதேவரை நாம் மனதார வழிபட்டு, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்.

bramma

நம்முடைய தலையெழுத்தை அந்த பிரம்ம தேவர் நிச்சயமாக திருத்தி எழுதுவார். அதாவது சில பேருக்கு பிறந்த நேரம் சரி இருக்காது. ஜாதக கட்டமும் சரி இருக்காது. வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை சந்திக்க வேண்டிய தலையெழுத்து அமைந்துவிடும். ரொம்பவும் துரதிர்ஷ்டசாலி களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடைய தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தையும் வழிபாட்டு முறையும் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

என்னடா தலையெழுத்து இது. நம்முடைய தலையெழுத்தை பிரம்மா கொஞ்சம் திருத்தி எழுத மாட்டாரா என்ற புலம்புவோம் அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள சிறப்பான பதிவு என்றும் இதனை வைத்துக் கொள்ளலாம். சரி, பிரம்மதேவரின் வழிபாட்டை தெரிந்து கொள்வோமா. பிரம்ம தேவரை வழிபாடு செய்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்றால் வீட்டில் கட்டாயமாக பிரம்ம தேவரின் திரு உருவப்படம் இருக்க வேண்டும்.

bramma

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பிரம்ம தேவனுக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விடவேண்டும். பிரம்மதேவரின் படத்திற்கு முன்பு வெள்ளை நிற விரிப்பை விரித்து கொள்ள வேண்டும். மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது மேலும் சிறப்பு. தரையில் உள்ள விரிப்பின் மீது சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டு, முதலில் விநாயகரையும் குலதெய்வத்தையும் வணங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக பிரம்ம தேவருக்கு வணக்கம் செலுத்தி விட வேண்டும். அதன் பின்பு பின்வரும், பிரம்ம தேவருக்கு உரிய மந்திரத்தை 18 அல்லது 108 அல்லது 1008 முறை உச்சரிக்க வேண்டும். கட்டாயம் இந்த கணக்குகளில் ஏதாவது ஒரு கணக்கை தேர்ந்தெடுத்து தான் உச்சரிக்க வேண்டுமே. தவிர, 11, 21, 51, 101 என்ற கணக்கில் எல்லாம் இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது.

bramma

ஓம் நமோ பகவதே
சதுர்முகாய வேதாத்மனாய
ஹிரண்யகர்பாய பிரம்மாய ஸ்வாஹா

bramma

நம்பிக்கையோடு பிரம்ம தேவரை மனதார நினைத்து உண்மையான பக்தியோடு இந்த மந்திரத்தை லட்சம் முறைகளுக்கு மேல் உச்சரித்து விட்டால் நிச்சயமாக பிரம்மதேவர் உங்களுக்கு காட்சி அளிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் இந்த மந்திரத்தை 15 லட்சம் முறைக்கும் மேலே உச்சரித்தால் பிரம்மதேவரின் பிரம்மாஸ்திரம், பிரம்மதேவரின் கையால் நமக்கு கொடுக்கப்படும் என்றும் சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. (இத்தனை இலட்சம் முறையையும் ஒரே நாளில் நம்மளால் ஜெபிக்க முடியாது. ஒவ்வொரு நாள் நீங்கள் உச்சரிக்கக் கூடிய மந்திரமும் கணக்கில் சேர்ந்து கொண்டே வரும்.)

vishnu-bramma

பிரம்ம தேவரை நேரில் தரிசனம் செய்வதற்கும், பிரம்மாஸ்திரம் கிடைப்பதற்கும் நாம் இந்த மந்திரத்தை உச்சரித்து பிரம்ம தேவரை வழிபாடு செய்கிறோமோ இல்லையோ, இந்த மந்திரத்தை தினம்தோறும் வெறும் 18 முறை உச்சரித்து வந்தால், நம் உடலில் இருக்கும் நோய்கள் தீரும். வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் தீரும். நம்முடைய தலை எழுத்து தவறாக எப்படி கிருக்கப்பட்டு இருந்தாலும், அந்த தலையெழுத்து சரியான முறையில் திருத்தி எழுதி தரப்படும் என்பது மட்டும் உறுதி. நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை தினம்தோறும் 18 முறை உச்சரித்து வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அந்த பிரம்ம தேவரை மனதார வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -