- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilதலை முடி பிரச்சினையை தீர்க்கும் கிராம்பு எண்ணெய்

தலை முடி பிரச்சினையை தீர்க்கும் கிராம்பு எண்ணெய்

- Advertisement -

மன்னனுக்கு எப்படி கிரீடம் அழகோ அதே போல் தான் நாம் ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே கிடைத்த கிரீடமாக திகழ்வது நம்முடைய தலைமுடி. எந்த அளவிற்கு ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கிறதோ அதற்கேற்றார் போல் தான் நம்முடைய வயதையும் பிறர் தீர்மானிக்கிறார்கள் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அவர்கள் முடியின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதற்கு கிராம்பை வைத்து எந்த முறையில் எண்ணெய் தயார் செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய சமையலறையை மருத்துவமனையாக பயன்படுத்தி இருந்தார்கள். அவர்களுக்கு எந்த வித உடல் ரீதியான அழகு ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்கு தீர்வை அவர்களுடைய சமையலறையில் இருந்தே ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த வகையில் நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க உதவக்கூடிய ஒரு பொருளாக தான் கிராம்பு திகழ்கிறது.

- Advertisement -

கிராம்பில் ஆன்டி-ஆக்சைடு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த கிராம்பை நம்முடைய தலைமுடிக்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் உதிர்ந்த இடத்தில் ஆரோக்கியமான முடி வளர்வதை நம்மால் காண முடியும். கிராம்பை வைத்து தலைக்கு பல விதங்களில் பல பொருட்களை தயார் செய்ய முடியும். கிராம்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி நம்முடைய தலையில் தினமும் தேய்ப்பதன் மூலமும் தலைமுடி விரைவிலேயே வளரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த தண்ணீரை நீண்ட நாட்கள் வைத்து நம்மால் உபயோகப்படுத்த முடியாது அல்லவா அதற்கு பதிலாக கிராம்பை வைத்து இந்த முறையில் எண்ணொய் தயார் செய்தோம் என்றால் அதை ஆறு மாத காலம் வரை கூட வைத்து உபயோகப்படுத்த முடியும். அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் வேண்டும். ஒன்று கிராம்பு மற்றொன்று பூண்டு. வெங்காயத்தில் எப்படி ஆன்ட்டி வைரல் இருக்கிறதோ அதே போல் தான் பூண்டிலும் ஆன்டிவைரல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கு இந்த பூண்டு மிகவும் உதவி புரிகிறது. மேலும் இதில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய எண்ணெய்யானது ஆலிவ் எண்ணெய்யாக இருந்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். ஒருவேளை ஆலிவ் எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் சாதாரணமாக நாம் தலைக்கு உபயோகப்படுத்தும் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கிராம்பை போட்டு நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இதனுடன் ஐந்து பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் 100 எம்எல் அளவிற்கு நாம் தலைக்கு உபயோகப்படுத்தக்கூடிய எண்ணையை ஊற்ற வேண்டும். இந்த கண்ணாடி பாத்திரத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் அடியில் ஒரு துணியை வைத்து அதற்கு மேல் வைக்க வேண்டும். பிறகு எண்ணெய் மூழ்கும் அளவிற்கு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து டபுள் பாய்லிங் மெத்தடில் குறைந்தபட்சம் 40 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

பிறகு அந்த எண்ணையை எடுத்து வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தயாராகிவிட்டது. இந்த எண்ணெய் சூடு ஆறிய பிறகு நம்முடைய தலைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தினமும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். அப்படி தினமும் எண்ணெய் வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டுவிட்டு பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்துக் கொள்ளலாம். இந்த முறையில் எண்ணெய் தயார் செய்து நாம் குளிக்கும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய முடி உதிர்தல் பிரச்சனை என்பது தீரும். பொடுகு பிரச்சனையும் தீரும். பேன் ஈறு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் உருவாவதையும் நம்மால் காண முடியும். முடி உதிர்வை குறைப்பதற்கும் இந்த எண்ணெய் நமக்கு உதவும்.

இதையும் படிக்கலாமே:ஆரோக்கியமான முடியை பெற உதவும் ஹேர் பேக்
சமையலறையில் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து இந்த முறையில் எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்துபவர்களுக்கு அவர்களுடைய தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்