வீட்டின் தலை வாசலில் எலுமிச்சை பழத்தை வெட்டி வைப்பது ஏன்? துன்பங்களை போக்கும் எலுமிச்சையின் தலைவாசல் ரகசியங்களை தெரிஞ்சிக்காம விட்டுடாதீங்க!

vasal-lakshmi-lemon
- Advertisement -

வீட்டின் பிரதான வாசலில் எப்பொழுதும் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் வீட்டை கட்டும் பொது தலைவாசல் வைத்ததும் சிறப்பு பூஜை செய்து பின்னர் மற்ற வீட்டு வேலைகளை துவங்குகின்றனர். இத்தகைய தலை வாசலில் அமர்ந்திருக்கும் நல்ல தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும். இதன் சக்தியை அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வாசலில் கட்டி தொங்கவிடப் படுகின்றன. அதில் எலுமிச்சை பழத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துகின்றனர்? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்கிற வியக்க வைக்கும் தகவல்களைத் தான் ஆன்மீகமாக இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

தலைவாசல் பூஜை தொடர்ந்து செய்பவர்களுக்கு வாழ்வில் இன்னல்கள் என்பது குறையும் என்பது நம்பிக்கை. தீராத துன்பங்களை தீர்க்க வைக்கும் இந்த தலைவாசல் பூஜை என்பது வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையில் செய்யக்கூடியது. இந்த இரண்டு கிழமைகளிலும் பூஜை அறையில் பூஜிப்பது போல தலை வாசலிலும், இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து தூபம் காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

எப்பொழுதும் வாசல் கதவில் ஏறி நின்று விளையாடுவது அல்லது அதை சத்தம் வருமாறு அப்படியே விட்டுவிடுவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. வாசல் கதவு எப்பொழுதும் சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். வாசல் கதவு சத்தம் கொடுத்தால் அதை உடனடியாக தேங்காய் எண்ணெய் விட்டு சரி செய்து விட வேண்டும். கதவின் தாழ்ப்பாளை ஆட்டுவது போன்ற தரித்திரம் தரும் செயல்களையும் எப்பொழுதும் செய்யக்கூடாது.

தலைவாசலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக சம அளவில் வெட்டி குங்குமம் தடவி வைப்பார்கள். இதனால் கெட்ட சக்திகள் எதுவும் நம் வீட்டில் நுழையாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிரபஞ்சம் முழுவதும் நல்ல சக்தி மற்றும் கெட்ட சக்தி இரண்டுமே கலந்து தான் நிறைந்து இருக்கின்றன. நமக்கு நல்லது நடக்கும் பொழுது அது நல்ல சக்தியாலும், கெட்டது நடக்கும் பொழுது அதை எதிர்மறை ஆற்றல்களாலும் நடைபெறுகிறது என்பதை நம்மால் உணர முடியும். இந்த எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து நமக்கு நல்ல சக்திகளை கொடுக்கக்கூடிய தன்மை எலுமிச்சை பழத்திற்கு உண்டு. எலுமிச்சை பழத்தை அதனால் தான் தேவ கனி என்று வர்ணிக்கின்றனர்.

- Advertisement -

புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை மட்டுமே திருஷ்டி கழிக்கவும், இது போல வாசலில் வைக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். இரண்டு புறங்களிலும் வெள்ளிக்கிழமை அன்று எலுமிச்சையை இது போல் செய்து வைக்க ஏராளமான நன்மைகள் நடக்கும். உடல் ரீதியான பிரச்சனை, குடும்ப சண்டை, பண பிரச்சினை என்று எல்லாவற்றையும் தீர்க்கக் கூடிய அற்புதமான பரிகாரமாக இந்த எலுமிச்சை கனியை தலைவாசலில் வெட்டி வைப்பது என்பது அமைந்துள்ளது.

மேலும் 11, 21, 51, 101 என்கிற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை ஒற்றைப்படை எண்களில் வரிசையாக மாலை போல கோர்த்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு தலைவாசல் மேலே இரண்டு பக்க முனைகளிலும் கட்டி விடுவது உண்டு. இது போல செய்வதால் தடை இல்லாத வெற்றி கிடைக்கும் என்பதை நம்பிக்கை. புதுமனை புகுவிழா மற்றும் புதிதாக வீட்டிற்கு குடியேறுபவர்கள் அல்லது கடை, தொழில் என்று துவங்குபவர்கள் இது போல வாரா வாரம் செய்வது ரொம்பவும் விசேஷமானது.

அது மட்டுமல்லாமல் திருஷ்டிகள் நீங்க, மற்றவர்களுடைய பொறாமை பார்வைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழத்துடன் ஒரு துண்டு இரும்பு கம்பி, பச்சை மிளகாய் மற்றும் கரித்துண்டு ஆகியவற்றை சேர்த்து கோர்த்து வாசலுக்கு நடுவே கட்டி தொங்க விடுவார்கள். இது மற்றவர்களுடைய தலையில் படாதபடி இருக்க வேண்டும். இது போல் வாரம் ஒரு முறை மாற்றி வர திருஷ்டி தோஷங்கள் அண்டாது. இப்படி தலை வாசலுக்கும், எலுமிச்சை பழத்திற்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. எலுமிச்சை பழத்தை இனி சமையலுக்கு மட்டுமல்லாமல் தலை வாசலுக்கும் பயன்படுத்துங்கள்.

- Advertisement -