நவம்பர் மாதம் ஏழாம் தேதி சூரசம்ஹாரம் என்பது நடைபெறும். அசுரனை வதம் செய்த முருகப் பெருமானை அன்றைய தினத்தில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் கேட்ட வரம் அனைத்தையும் முருகப்பெருமான் அருள்வார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அற்புதமான நன்நாளில் முருகப்பெருமானை நினைத்து நாம் பாடக்கூடிய ஒரு பாடல் நம்முடைய தலையெழுத்தையே மாற்றும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை பற்றி தான் இந்த ஆன்மீகம்குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தலையெழுத்தை மாற்றும் முருகனின் பாடல்
முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்கள், கவசங்கள், மந்திரங்கள் என்று பல இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். அதை எந்த முறையில் பாராயணம் செய்வது, எப்படி பாராயணம் செய்வது, எந்த நேரத்தில் பாராயணம் செய்வது என்பது எல்லாமே உள் அடங்கி தான் இருக்கும். அந்த வகையில் நம்முடைய தலையெழுத்தை மாற்றுவதற்கு உதவக்கூடிய முருகனின் பாடலை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த பாடலை நவம்பர் மாதம் 7ஆம் தேதி சூரசம்ஹாரம் நடந்த பிறகு குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரே ஒருமுறை பாடினால் போதும். முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தரையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த பாடலை பாட வேண்டும். எப்பொழுதும் வீட்டில் எந்த முறையில் சூரசம்கார நாள் அன்று பூஜை செய்வோமோ அதே போல் பூஜை செய்து முடித்துவிட்டு இந்த பாடலை பாடினால் போதும்.
பாடல்
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே
பொருள்
முருகப்பெருமானின் வேல் பட்டு சூரனும் அவனது ஆணவமும் அழிந்து சேவலாகவும் மயிலாகவும் மாறியது. அதுபோல உன் கால் பட்டு என்னுடைய மோசமான தலையெழுத்து அழிந்து போக செய் முருகா! கந்த கடவுளே! என்னுடைய துன்பத்திற்கு காரணமான தலையெழுத்து எவ்வளவு மோசமாக இருந்தாலும் உன்னுடைய திருவடியை என் தலை மேல் வைத்து அதை அழித்து என்னுடைய வாழ்க்கை சிறப்படைய, வளமானதாக இருக்க அருள் செய் முருகா!!!
இந்த ஒரு பாடலை மனம் உருகி முருகப் பெருமானை நினைத்து யார் ஒருவர் சூரசம்காரம் நிறைவடைந்த பிறகு கூறுகிறார்களோ, அவர்களுடைய தலையெழுத்து முற்றிலும் மாறி இதுவரை அவர்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பான வளமான வாழ்க்கையை பெறுவார்கள்.
இதையும் படிக்கலாமே:ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
சூரசம்கார நாளன்று மன நிறைவோடு இருக்கக் கூடிய முருகப்பெருமானிடம் இந்த ஒரு பாடலை ஒருமுறை மனம் உருகி பாடுபவர்களுக்கு அவர்களுடைய மோசமான தலையெழுத்து மாறி நல்ல தலையெழுத்து உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.